சில மாநகர சபைகள், நகர சபை மற்றும் பிரதேச சபைகளின் தலைவர் பொதுமக்கள் நிதிகளை பெருமளவில் பொது விழாக்களுக்கு செலவழிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,
பொதுஜன முன்னணியின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட மேயர் மற்றும் பிரதேச சபைத் தலைவர்கள் உள்ளிட்டோர் பொதுமக்களின் நிதியை வீணாக செலவழிக்கின்றனர்.
வருமானம் குறைந்த மக்களிடம் இருந்து அறவிடப்படும் பணத்தை இவ்வாறு செலவழிப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், இதனை முடியுமானளவு குறைத்துக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, தற்போதைய அரசாங்கமானது நகர சபைகள், மாநாகர சபை மற்றும் பிரதேச சபை ஆகியவற்றின் நிதிகளை பொது விழாக்களுக்கு செலவழிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், இந்தப் பணத்தை மக்களின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.