எஸ்.வி.சேகர் மீது திருநெல் வேலி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து நடிகரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.வி.சேகர், தனது முகநூல் பக்கத்தில் தரக் குறைவாக வெளியிட்ட பகிர்வுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தான் வெளியிட்ட விமர்சனத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பவே சிறிது நேரத்தில் தனது முகநூல் பக்கத்தி லிருந்து அதை நீக்கிவிட்டார். இருப்பினும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில் திருநெல் வேலி 1-வது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் எஸ்.வி.சேகர் மீது, திருநெல்வேலி பத்திரிகையாளர் மன்றத் தலைவர் கோபால்சாமி வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட் (பொறுப்பு) பிஸ்மிதா, விசாரணையை வரும் 25-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.