நேரம் காலை 10.20மணியைக் கடந்து கொண்டிருந்தது. மின்னல் வேகத்தில் செயற்படும் போராளிகளின் முன்னால் ஆமை வேகத்தில் நகரும் நேரமும் மின்னல் வேகத்தில் நகர்வது போலவே தெரிந்தது.
களமுனையில் முட்புதர்களும் பற்றைக் காடு களும் அதிகமாக இருந்தன. கிராமத்து வீடு ஒன்றில் ஒவ்வொரு வகையான மலர்களைச் சொரியும் பூஞ்செடிகளை வைத்து அவற்றின்; வர்ண அழகைப் பார்த்து மகிழ்வதைப்போல இங்கும் பலவகையான மலர்கள் இருந்தன. ஆனால் அவை அனைத்தும் நீரற்ற வறள்; வனத்தின் மலர்களாகவே இருந்தன.
அவற்றிலும் ஒரு அழகிருப்பதை களமுனையில் பார்க்கும்போது மாத்திரமே உணர முடிந்தது. காப்பரணின் ஒவ்வொரு இடைவெளிகளிற் குள்ளும், கடுமையான பொழுதுகளிற்குள்ளும் அவற்றின் எழில் மனதை வருடிக்கொண்டிருநத்து.
கானல் மலரானாலும் அவற்றின் எழிலை ரசிக்கத் தெரிந்தால் அநத் உயிர் குடிக்கும் களமுனையிலும் ஒரு அற்புதமான எழில் இருப்பதை அறிந்துவிட முடியும். அந்தப் பொழுதுகளில் எறிக்கும் வெயிலின் வேட்கை மிக அதிகமாகவே இருந்தது. அநத் அரைமதியப் பொழுது ஒரு முழுமதியப் பொழுதுபோல எங்களுக் கிருந்தது.
எதிரி உயிர்கொல்லும் கணை களைக் கொழுத்திக் கொணடிருப்பதைப் போல வெயில் பயங்கரமாகத் தனது கணக் கையும் தீர்த்துக்கொண்டிருந்தது. தாகம் ஒருபுறம் நாக்கை அரித்துக் கொண்டிருக்க மறுபுறத்தில் வெப்பம் உடலை வியர்வையால் குளிப்பாட்டிக் கொண்டிருந்தது.
அநத் முற்பகல் பொழுது ஒரு முழு நடுப்பொழுது போல் தன்னைக் காடடி;க்கொண்டிருந்தது. இந்த அனுபவம் எங்களுக்குக் கடினமானதாக இருந்தது. ஆனால் போராளிகள் அதை எள்ளளவில் கூட பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. அனைவரும் தமக்கான வேலைகளைச் செய்துகொண்டிருந்தார்கள்.
கடுமையான தாக இருந்தாலும் அதனை நாங்களும் போராளிகளைப் போலச் சமாளித்துக் கொண்டோம். இப்படி இருக்க நீணட்தூரம் நடந்து போன எஙக்ள் நாக்கு நீர் வற்றிப்போய் வறண்டு போய்விட்டது. தண்ணரீ;க் குளத்தில் வீழ்ந்துவிட வேண்டும் போல உணர்விருந்தது.
ஆனால் அநத்க் களத்தில் முகம் கழுவுவதற்குக்கூடத் தண்ணீருக்குப் பெரும் தட்டுப்பாடு என்பது எங்களுக்கு அப்போது தான் தெரிந்தது. குணமதனிடம் ”இஞ்ச கிணற்றில் தண்ணீர் எப்படி?” என்று கேட்க காப்பரணில்; நினற் போராளிகள் அனைவரும் சிரித்துக் கொண்டே ”பூநகரி செமம்ண்குன்று அகதி முகாம் நிலைதான்” என்றார்கள்.
இப்படிப் பதில் கிடைககும் என்பதை நாங்கள் உணராத தால் மனதிற்கு சற்று வேதனையாகத்தான் இருந்தது.
இதற்கிடையில் செந்திரையன் எங்களிடம் அண்ணா றிங்ஸ் கரைச்சு வைச்சிருக்கிறன் குடிச்சுப்பாருங்கோ. சினீ தான்…. கொஞ்சம் மட்டு என்று இழுத்தான். எங்களுக்கு இருக்கிற தாகத்திற்கு எதனையும் உணரும் நிலையில் நாங்கள் இருக்க வில்லை. அந்த நெருப்பு விளையும் நிலத் தில் செந்திரையன்; கடவுள்போலத் தோன்றி னான்.
எந்தப் பேச்சும் எவருடனும் தொடுக்கும் எண்ணம் மாறிப்போய் அவற்றை குடித்து முடித்துவிட்டு மூச்சை விட்டோம். பானம் நாக்கு நுனியால் வயிற்றிற்குள் இறங்குவது அப்படியே அச்சொட்டாகத் தெரிந்தது. ஐஸ் போலக் குளிர்நது; மெது வாக வயிற்றுககு;ள் இறங்க வயிறு பூரித்துக் கொண்டது. வயிறு குளிர்நதாலும் நாக்கு இன்னும் வேண்டும் என்றது. அதற்கான இடம் இதுவல்ல என்பதைப் புரிநது; கொண்டு சிந்தனையைத் திருப்பிக்கொண்டோம்.
இருந் தும் மனதிற்குள் இளம் போராளிகள் இவற்றுகn;கல்லாம் எப்படித் தங்களை இயல்புபடுத்திக்கொண்டு சாதாரணமாகச் செயற்படுகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது. இந்தக் கேள்விக்கான பதிலைக் குணமதனிடம் வெயிலை எப்பிடிச் சமாளிக்கிறியள் என்றோம். வெயிலை இஞ்ச ஒருத்தரும் கணக்கிலையே எடுக்கமாட்டாங்கள் அங்க பாருங்கோ பெடியள் என்று சுடடி;க்காட்டி இதெல்லாம் எங்களிற்கு மிகச் சாதரணமான தாகப் போய்விடட்து என்பதுபோல பதில் கூறிமுடித்தான்.
வெயிலைப் பற்றிக் கதைத்து முடித்துவிட காப்பரணுக்குள் இருந்து நித்திரை முறிக்கும்| சதத்ம் கேட்டது. சட்டென்று ஷஷயார் நித்திரை கொள்வது என்று கேட்டோம்.|| காப்பரணில் இருந்த அனை வரும் சிரித்துவிட எங்களுக்கு எதுவும் புரிய வில்லை. குணமதனைப் பார்த்தோம் அவனும் எங்களைப்போல எதுவும் புரியாமல் நின்றான்.
ஏன் சிரித்தார்கள் என்பதை உணர்ந்து கொள்வதற்கிடையில் குணமதன் ஏன்ராப்பா என்ன எல்லாரும் இப்பிடிச் சிரிக் கிறியள்|| எனறு; கேட்க நித்திரையாய்க் கிடந்த போராளி கண்களைக் கசக்கிக் கொண்டு வெளியில் வந்தான். வந்தவன் எதுவும் புரியாமல் அபப் டியே நின்றுவிட்டான்.
அனைவரும் அவனைப் பார்க்க அவன் இன்றைக்கு விசயம் பிழைத்துவிட்டது என்ப தாக எண்ணியவன் போல அப்படியே நின்றான். காப்பரணில் உள்ள அனைவரும் அநத்ப் போராளியைப் பார்த்து கேலியாய்ச் சிரிக்க அவன் அனைவரையும் புரியாமல் பார்த்துக்கொண்டு நின்றான். கண்களைக் கசக்கிக்கொண்டிருந்த போராளியிடம் நாங்கள் என்ன காய்சச்லோ|| என்று கேட்க அவன் பதில் கூறுவதற் கிடையில் காப்பரணில் இருந்த போராளிகள் இல்லை அரும்பாலனுக்கு இப்பிடித்தான் அடிக்கடி நெஞசு; க்குத்து வைத்துக்குத் தெல்லாம் வாறது|| எனறு; கூற குணமதன் திடீர்ரெண்டு என்னப்பா இப்பத்தானே எங்கட டொகட்ர் போனவர் காட்டியிருக்கலாமே|| என்றான் சீரியசாக.
அரும்பாலன் சறறு;ச் சினமான முகத்துடன் தன்னை மறந்து சிரித்துவிட அங்கிருநத் அனைவரும் வாய் விட்டுச் சிரித்தனர். அப்போதுதான் எங்களிற்கு அரும்பாலனின் கள்ளம் பிடிபட்டது. சில நேரஙக்ளில் ஐஸ்| அடிப்பதற்கு அரும் பாலன் இப்படியான சில வருத்தங்களைத் திடீரென உருவாக்கிவிடுவான்|| என்றார்கள் போராளிகள். அவர்களின் பகிடி கூடிவிட அரும் பாலன் அனைவரையும் ஒரு தடவை ஏற இறங்கப் பார்த்தான். காப்பரண் அமைதியாக ஷஷஇனி அரும்புக்கு இப்பிடி ஏதும் திடீரென்று வருத்தம் வந்தால் உடன எனக்கு அறிவியுங்கோ|| என்றான் குணமதன். உண்மையில் அரும்பாலன் பெயரிற்கு ஏற்ப அரும்பாகவே இருந்தான். களமுனை யில் அனைவரும் அவனில் அன்பாகவே இருந்தார்கள். அதனால் அவனை அனை வரும் ஒருகை பார்த்துவிட்டுப் போனார்கள்.
அரும்பாலன் சணடையில் மிகவும் திறமை யானவன். ஆனால் அதனைப்போல வேலைகளுக்கு; கள்ளமடிப்பதிலும் அவனுக்குத் திறமை இருந்தது. பரந்தன்-முல்லை நெடுஞ்சாலையில் உடையார்கட்டுக்கு அடுத்த கிராமம் இவ னுடையது. அங்குதான் இவனுடைய பெற் றோரும் ஏனைய அவனின் உறவினர்களும் இருகக்கிறார்கள். இவன் குடும்பத்தின் இறுதிப் பிள்ளையாக இருந்தான்.
ஒரு வருடத்திற்கும் மேலாக புதுக்குடியிருப்புப் பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனையின் களஞ்சியப் பகுதியில் தொழில்புரிந்திருந்;தான். பின்னர் கடந்த வருடம் தன்னை விடுதலைப் போராட் டத்தில் இணைத்து இப்போது களத்தில் நிற்கிறான். இவனின் வீடடு; நிலைகள் பற்றி அறிந்துகொண்டு இயக்கத்திற்கு வந்ததுக்கு ஆமியை கண்டனீங்களோ|| என்று பகிடியாகக் கேட்டோம். ஆமியோட அடிபட்டு அவனை அடிச்சுக் கலைச்சனான் என்றான் மிடுக்கோடு. இவனிற்கு இப்படி ஒரு சண்டை அனுபவம் கிடைத்திருந்தது களமுனையில் இருக்கின்ற ஏனைய போராளிகளிற்கச் சற்று கவலையை ஏற்படுத்தி யிருக்க வேண்டும்.
அங்கிருந்த போராளி ஒருவன் சொன்னான் அண்ணா நாங்கள் ஆமியைத் தேடித்திரியிறம் ஆனால் அவன் எங்களிட்ட மாட்டுறான் இல்லை அனால் அரும்பாலன் நிண்ட எல்.பி ரீமிட்ட அவன் முடடி;ட்டான்|| எனறான். அந்தப் போராளியின் கதையைக் கேட்டதும் அரும்பாலன் சட்டென்று இயக்கத்தில சண்டை பிடிக்கிறதுக்கும் அதிஸ்டம் வேணும்|| என்றான். அவன் அநத்க் களமுனையில் தனக்குக் கிடைத்த சண்;டையின் கதையைச் சொன்னான்.
முதல் நாள் பகல்பொழுது மெல்ல மங்கிக்கொண்டிருக்க இருள் சூழ்ந்து கொண்டிருந்தது. அந்த மெல்லிய இருட்டில் நானும் மூனறு; போராளிகளும் எங்கள் காப்பரணுக்கு முன்னுக்கு எதிரிகளின் நட மாட்டங்களை அவதானிப்பதற்காக எங்கட எல்.பி இடத்துக்குப் போய் இருந்தோம் களமுனைப் பிரதேசத்தில் எதிரியின் நட மாட்டத்தை அவதானிப்பதற்காகப் போராளிகள் சுற்றுமுறையில் இந்தக் கடமைக்குச் செல்வது வழமை. இப்படி நாங்கள் சென்று; எங்களிற்குத் தரப்படட் கட்டளைப்படி செயற் பட்டுக் கொண்டி ருந்தோம். இரவுப்பொழுது எதிரியின் எந்த நடமாட்டஙக் ளும் இருக்க வில்லை.
அன்றைய இரவுப்பொழுது கடந்து விட காலைப்பொழுது புலர்ந்தது. நாங்கள் எங்கள் நால்வருக்கும் கடமைகளை ஒழுங்கு செய்து கொண்டோம். இதன்படி எனக்கு அந்தப் பொழுது ஓய்வாக இருந்தது. நான் பதுங்கு குழியில் இருந் தேன்.
என்னுடன் வந்த் சக போராளிகளான கனியின்பன், கதிர்க்குன்றன், செல்லக்கண்டு ஆகியோருக்கு காவற்கடமைகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. காலை 8.05 மணிக்கு கடுமையான தாக்குதல்கள் தொடங்கின.
சத்தங்கள் காதைக்கிழிக்க திடீரென எழுந்த நான் என்னச் சுதாகரித்துக்கொண்டு எதிரிகளின் தாக்குதல்கள் வந்த பகுதிகளை நோக்கித் தாக்குதலை நடத்தினேன். தாக்குதல் நடத்துகின்றபோது எனக்கு ஆதர வாக என்னுடன் கூடவந்த போராளிகள் எவரும் தாக்குதல்களை நடதத்வில்லை.
அவர்களது துப்பாக்கிகள் ஓயந்;திருந்தன. எதிரியின் தாக்குதல் மட்டும் என்னை நோக்கி வந்துகொண்டிருந்தது. நான் எனது தாக்குதலை மிகவும் நுட்பமான முறையில் மேற் கொண்டேன் என்றான்.
அதற்குப்பிறகு என்ன நடந்தது என்பதை அறிந்துவிட மனம் துடித்துக் கொண்டிருந்தது. விறுவிறுப்பான சம்பவம் எல்.பியில் இவனுடன் கூட நின்ற போராளி களின் நிலை என்ன? என்பதும் ஆமி என்ன செய்தான் என்பதும் இப்போது முடிவுறாத முக்கிய பகுதிகளாக இருந்தன. அரும்பு சொல்லுங்கோ என்றோம்;. அவன் தொடர்ந்தான், என்ர அடியோட அம்புஸ்க்கு வந்த ஆமிக்காறர் திரும்பி ஓடிப்போட்டாங்கள் என்று கூறியவன் கதையைத் தொடரச் சற்றுத் தயங்கினான். அவனின் கதையில் ஏற்பட்ட தளர்வு எங்களிற்கும் கதையைத் தொடர்வது பற்றிய தயகக் த்தை ஏற்ப்படுத்தியது.
அபப்டி ஏதும் விபரீதமாக நடந்திருக்க்கூடாது என்று உள் மனம் சொல்லிக்கொண்டிருந்தது. ஆனால் சற்றுத் தயங்கிய அரும்பாலன் அந்தச் சண்டையில் நான் அவனுக்கு அடிச்சிருக் காட்டில் எங்கண்ட பெடியளின்ர வித்துடலை அவன் எடுத்துக்கொண்டு போயிருப்பான் என்று கூறிக்கதையை முடிக்க நாங்க்ள் துடிதுடித்துப் போனோம். ஆமியை அடிச்சுக் கலைச்சுப்போட்டு வித்துடலாக இருந்த கனியின்பனையும் கதிர்குன்றனையும் தூக்கிப் பதுங்குகுழிக்குள் வைச்சிட்டு காயப்பட்ட செல்லக்கண்டையும் ஓடிப்போய் தூக்க பின்னுக்கிருந்து போராளிகள் உதவிக்கு வந்துவிட்டார்கள்; அதுக்குப்பிறகு எல்லாரை யும் பின்னுக்கு கொண்டுவந்திட்டம்.
என்றான். இந்தக் கதையை அரும்பாலன் சொல்லி முடிக்கும் வரைக்கும் அந்தக் காப்பரணில் இருந்த போராளிகள் அனை வரும் அமைதியாக இருந்தார்கள். சீறிக் கொண்டிருந்த எதிரியின் உயிர்கொல்லிக் கணைகளின் சீறல்கள்கூட எவரது காது களிற்கும் எட்டவில்லை. திடீரென அரும்பாலனை கடுமையாக அறுத்துக் கொண்டிருந்த செந்திரையன் மிகவும் அமைதியாக அன்றைக்கு அரும் பாலன் இல்லாட்டில் ஆமிக்காறன் எல்லாத் தையும் கொண்டுபோயிருப்பான் என்று கூறி அரும்பாலன் அந்த சண்டையில நல்லாய் செயற்பட்டதுக்கு கட்டளைத் தளபதியிட மிருந்து பாராட்டுக் கிடைத்தது என்றான்.
களமுனையில் ஒவ்வொரு சம்பவங்களும்;; மனதை வேதனைப்படுத்துகின்ற சோகம் நிறைந்ததாகவும் வயிறுகுலுங்கச் சிரிப்பூட்டும் நகைச்சுவை நிறைந்ததாகவும் அமைந்திருந் தது. அந்தப் போராளியின் துணிவுமிக்க செயலை எண்ணி மனதிற்குள் பெருமித மடைந்துகொண்டு அந்தக் காப்பரணில் இருந்து அடுத்த காப்பரண் நோக்கி நகர் வதற்குத் தயாரானோம்.
தொடரும்……
போர் முகம்-02
https://www.uyirpu.com/?p=9899
தொடரும் …….
நன்றி.
மூலம்
– தாரகம்