சவூதி அரேபியா நாட்டில் உள்ள மெக்கா நகருக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் புனித பயணம் மேற்கொள்வர்.
இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 17 பயணிகளுடன் பேருந்து ஒன்று சவூதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு புறப்பட்டு சென்றுள்ளது. சவூதியின் மேற்கு நகரான அல் கலாஸ் பகுதியருகே சென்ற பேருந்து எரிபொருள் ஏற்றி வந்த லாரி ஒன்றின் மீது மோதி விபத்தில் சிக்கியது.
இதில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 4 பேர் பலியாகினர். 12 பேர் காயமடைந்தனர். இதனை இங்கிலாந்துக்கான சவூதி தூதர் உறுதிப்படுத்தி உள்ளார்.
தொடர்ந்து காயமடைந்தோர் மெக்காவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். பலியானோரில் தாய் மற்றும் மகனும் அடங்குவர். மற்ற இருவரும் வயது முதிர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு சவூதி அரேபியாவில் நடந்த சாலை விபத்தில் மெதீனாவுக்கு புனித பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 6 பேர் பலியாகினர். அவர்களில் 2 மாத குழந்தையும் அடங்கும்.