கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, அந்த மாநிலத்தில் பிரசாரம் மேற்கொள்வதற்காக டெல்லியில் இருந்து ராகுல் காந்தியும், அவரது பாதுகாப்பாளர்களும் விமானம் மூலமாக ஹூப்ளிக்கு வியாழக்கிழமை வந்தனர். ஹூப்ளி அருகே அந்த விமானம் தரையிறக்கப்படுவதற்கு முன்னதாக அது, வழக்கத்துக்கு மாறாக சென்றதாகத் தெரிகிறது.
அப்போது விமானம் ஒரு புறம் சாய்ந்ததாகவும், பின்னர் வேகமாக தரையை நோக்கி பயணித்ததாகவும் கூறப்படுகிறது.இதையடுத்து மாநில டிஜிபி நீலமணி ராஜுவிடம் இதுதொடர்பாக காங்கிரஸ் தரப்பில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.அதேபோன்று, மத்திய விமானப் போக்குவரத்துத் துறையும் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையில், ராகுல் காந்தி பயணித்த விமானம் சந்தேகத்துக்குரிய வகையில் மோசமாக தரையிறக்கப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் தரப்பில் போலீஸாரிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பப் பிரச்னைகளால் இந்த சம்பவம் ஏற்பட்டிருக்க வாய்ப்பிருந்தாலும், அவை சந்தேகத்துக்கு இடமளிப்பதாக இருந்ததாக அப்புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.