மாநில அரசு நலனுக்காகத்தான், மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதாகவும், அதேபோல் 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க. வெற்றிபெறும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மாநில அரசின் நலனுக்காக மத்திய அரசுடன் அவர்கள் இணக்கமாக இல்லை. அவர்களுடைய சுயநலனுக்காகத்தான் அவர்கள் இணக்கமாக இருந்து வருகிறார்கள்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அ.தி.மு.க.வால் வெற்றி பெறமுடியவில்லை. அவர்களால் எப்படி வருகிற 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியும். 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தோல்வி தான் அடையும்.
திவாகரன் நிருபர்களிடம் கூறும்போது, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தாலும் தெரிவிப்பேனே தவிர தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கமாட்டேன் என கூறியுள்ளதாக நான் கேள்விப்பட்டேன்.
திவாகரனுக்கு கடந்த 2002-ம் ஆண்டு முதல் உடல்நிலை சரியில்லை. உடல்நலம் குன்றியதால் அவர் உளறிக்கொண்டு இருக்கிறார். அவருக்கு எங்கள் மீது பாசம் இல்லாவிட்டாலும் நாங்கள் உறவினர் என்ற முறையில் அவர் மீது பாசம் வைத்துள்ளோம். அதனால் அவர் பேசுவதை நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அவரைப்பற்றி மன்னார்குடியில் உள்ளவர்களிடம் விசாரித்தாலே தெரியும்.