இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் இம்முறை மே தினத்தை மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்து யாழ்பாணத்தில் கொண்டாட திட்டமிட்டுள்ளதாக, சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார் கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையி நாம் இம்முறை மாணவர்களுக்கு சிறந்த கல்வி கூடங்கள் இன்மை,அநீதியான இடமாற்றம்,முறையான பதவி உயர்வு இன்மை,ஆசிரியர்களுக்கு மேலதிக வேலைகளை தலையில் சுமத்துதல்,இலவச கல்வியை இல்லாமல் செய்வதற்கான செயல்கள்,சம்பள முரண்பாடு,நிலுவை சம்பளம் வழங்கப்படாமை,மலையக ஆசிரிய உதவியாளர்களை ஆசிரியர் தரத்திற்கு இணைக்காமை ஆகிய முக்கிய பிரச்சினைகளை முன்னிறுத்தி மே தின நிகழ்வுகளை மேற்கொள்ளவுள்ளோம்.குறித்த மே தின நிகழ்வில் அனைத்து வடமாகாண ஆசிரியர்களும் பங்குபற்ற வேண்டும். இதேவேளை உலக தொழிலாளர் தினம் மே முதலாம் திகதி சர்வதேசம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது. இந்நிலையில் 7ஆம் திகதி கொண்டாட அரசு பணித்துள்ளமையை நாம் வண்மையாக கண்டிக்கின்றோம்” எனவும் அவர் குறிப்பிட்டார்