உபதலைவராக ரவி கருணாநாயக்க நியமிக்கப்பட்டமைக்கான காரணத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெளியிட்டுள்ளது.பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்பான முக்கிய ஆவணங்கள், ரவியிடம் உள்ளதனாலேயே அவரை பதவி விலக்க முடியவில்லை என ஐ.ம.சு.மு.-இன் பிரதம செயலாளர் மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார் கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார் மேலும், ஐக்கிய தேசிய கட்சியில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு நடவடிக்கையினால், கட்சிக்குள் பல முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.