தமிழ் மக்களுக்கு அரசாங்கம் வழங்குவதாக கூறிய சுயநிர்ணயம் இதுவரையில் முழுமைபடுத்தப்படவில்லை என நவசமசமாஜகட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ண தெரிவித்துள்ளார் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில் ;நல்லாட்சியும் தமிழர்களுக்கு வழங்குவதாக கூறிய சுயநிர்ணயத்தை இதுவரையில் முழுமையாக செயற்படுத்தப்படவில்லை என்பதே எனது எண்ணம் எனவே இதற்காக இன்னும் தமிழர் தரப்பு போராட வேண்டியுள்ளது. தற்போது புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன இதனூடாக முழுமையான அதிகாரங்களை வழங்குவதாக அரசாங்கம் உறுதி வழங்கியுள்ளது. எனவே அதற்கமைய அரசாங்கம் செயற்படும் என எதிர்பார்கின்றேன் இதற்காகவே நல்லாட்சியுடன் இணைந்து தமிழ் கட்சிகள் செயற்படுகின்றன. அதேபோல் இதனைக் கருத்தில் கொண்டு தான் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழ் கட்சிகள் எதிர்ப்பை தெரிவித்திருந்தன எனவே செல்வநாயகம் அவர்களின் இலக்கை அடைய இன்னும் போராட வேண்டியுள்ளது. அதற்காக அனைவரும் ஒன்றுப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என அவர் மேலும் தெரிவித்தார்.