சங்கநாத அரங்கு நிஜத்துடன் நிலவனின் வலி சுமந்த நினைவுகள் என்ற நேர்காணல் தொகுப்பு நூல் வெளியீடு 29.04.2018 அன்று பிரான்சு புறநகர் பகுதியான லாக்குர்னவ் நகரில் தமிழ்த்தேசிய தொலைக்காட்சியான ttn தமிழ் ஒளியின் ஆதரவுடன் வெளியிட்டு வைக்கப்பட்டது.
“வலிசுமந்த நினைவுகள் நேர்காணல் நூல் தொகுப்பு” இன்றயை கால கட்டத்தின் தேவை கருதியும் புலம் பெயர் தேசமெங்கும் வெளியிட வேண்டிய அகத்தியம் கருதியும் சுவிஸ் நாட்டின் ஓல்டன் மாகாணத்தில் 30.04.2018 திங்கள்கிழமை புதிய உதயம் இணையதளத்தின் ஊடக அனுசரனையில் வெகு ஏழுச்சியாக அறிமுகம் செய்யபட்டது.
நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் தமிழர் பாரம் பரியச் சுடர் ஏற்றலை, நிகழ்வின் சிறப்பு விருந்தினரான க.பார்த்தீபன் ஏற்ற அவருடன் இணைந்து மற்றுமொரு சிறப்பு விருந்தினரும் படைப்பாளரும்,எழுத்தாளர்,கவிதாயினி என பன்முக ஆளுமை கொண்ட திருமதி ஆதிலட்சுமி சிவகுமார் அவர்களும் ஏற்றி வைத்தனர்.
முள்ளி வாய்க்கால் தமிழின இன அழிப்பில் ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட எம் மக்களுக்கான நினைவு சுடரினை, தாய் மண்ணில் அத்தனை அழிவுகளையும்,இழப்புகளையும் சந்தித்த தாய் திருமதி வசந்தகோகிலம் புருசோத்தமன் ஏற்றிவைத்தார்.பின்னர் அகவணக்கம் இடம் பெற்று தமிழ்த் தாய் வாழ்த்துடன் நிகழ்வு ஆரம்பமானது.
இந்த நூல் வெளியீட்டு நிகழ்வின் வரவேற்புரையைத் தமிழீழத்தின் தேசியப் பாடகி திருமதி குமார் கரோலின் நிகழ்த்தினார்.
நிகழ்வின் தலைமை உரையைச் சிறப்பு விருந்தினர் திரு க.பார்த்தீபன் வழங்கினார்.அவர் தனது தலைமை உரையில்: இந்த நூல் பற்றி அகத்தியத்தை எடுத்தியம்பியும், 2009 ஆண்டின் பின்னர் தழிழ் மக்களின் வலியினை சொல்லுகின்ற நூல்கள் மிக குறைவு
இந்தச் சாட்சிய நூல்கள் போல் இன்னும் பல நூல்கள் வெளி வரவேண்டும். எம் இனத்தின்
வலிகளை உலகம் வரை கொண்டு செல்ல வேண்டிய கடமை எல்லோருக்கும் அவசியம் எனக் குறிப்பிட்டு உரையாற்றினார்.
தொடர்ந்து சிற்றுரையினை ttn ஊடகவியலாளர் திரு குருபரன் வழங்கிச் சிறப்பித்தார்.
வலிசுமந்த நினைவுகள் நூல் ஆசியர் அறிமுகத் தொகுப்பினைத் தழீழத் தேசியப் பாடகியும் ,எழுத்தாளருமான திருமதி மணிமொழி கிருபாகரன் அவர்கள் வழங்கினார். அவர் தனது உரையில் : நிஜத்துடன் நிலவன் பற்றிய பல விடயங்களைக் கூறினார். குறிப்பாகக் கல்வி மற்றும் கலைகள் மீது நிலவன் கொண்டிருந்த தீராத காதலையும்,போராட்டத்தின் மீது வைத்திருக்கும் உறுதியான ஓர்மத்தையும் பாராட்டிச் சென்றார்.
தொடந்து நூல் அறிமுக உரையை புதிய உதயம் வெளியீட்டுப் பிரிவு திரு தி.ஆனந்தவர்ணன் வழங்கினார்.
அதனை அடுத்து பேச்சாற்றலால் செல்வி இலக்கியா புருசோத்தமன் “வலிகளில் இருந்து வலிமை பெறுவோம் வாரீர்” என்று அரங்கம் அதிரவைத்துச் சென்றார்.
தொடர்து முதற் பிரதி வழங்கப்பட்டது. முதற்பிரதியினை திருமதி வசந்தகோகிலம் புருசோத்தமன் வழங்கிவைக்க நர்த்தகி நடனாலய முதல்வர் திருமதி மீனாம்பிகை வசீகரன் அவர்கள் பெற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து சிறப்புப் பிரதிகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து நிகழ்வின் சிறப்பு விருந்தினர் திருமதி ஆதிலட்சுமி சிவகுமாரன் முள்ளிவாய்க்கால் மனித குலம் சகித்து கொள்ள முடியாத இன அழிப்பு மற்றும் மனித மனச் சாட்சி வெட்கப்பட வேண்டிய ஓர் துன்பியல் சரித்திரம். மாவிலாறு தொடக்கம் முள்ளிவாய்கால் வரை தொடர்ந்த இன அழிவுக்கு நீதி கிடைக்க ஒன்றாய் உழைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என எடுத்தியம்பி அமர்ந்தார்.
நூல் ஆசிரியரும் போராட்டக் களத்தின் போராளியுமான திரு நிஐத்துடன் நிலவன்
கூறுகையில் தடைகளையும் வலிகளையும் தகர்த்து தேசம் நோக்கிய பாதையில் அனைவரும் ஒன்றாய்ச் செல்ல வேண்டும் என எடுத்துரைத்தார்.
நிறைவாக புதிய உதயம் இணையத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும்,இந்த நிகழ்வின் ஏற்பாட்டருமான
குண – டினேஸ் நன்றி உரையினை வழங்கினார்.
நம்புங்கள் தமிழீழம் நாளை கிடைக்கும் என்ற இலட்சியப் பாடலுடன் நிறைவுக்கு வந்தது.