சிந்தனைச் சிறையில்.
அகப்பட்ட மனம் சிறிதே.
ஆசுவாசப்படுத்திக் கொல்கிறது
அமைதியில்லாமல்!
வேகமாக நகரும் மணித்துளிகளின்
காலத்தின் பின்னே
தவிக்கும் சூழ்நிலைகளாக
அவலங்களின் ஆசைகள்!
சிரிக்கமுடியா சந்தோஷங்களில்
அழமுடியா தருணங்களில்
கடந்துபோன காலத்தின்
நினைவுகள் தடுமாற வைக்கும்!
அருகே கொக்கரிக்கும்
வைராக்கியம்
தள்ளாடும் மனதை
தள்ளிவிடும் கோபத்தின் உச்சத்தில்
பாவம் வலிமையிழந்த
உடல் என்ன செய்யும்!
தட்டுத்தடுமாறி எழம்போது
சமுதாயம் பேசும்
பாவம் பாவிமகன்
எத்தனை செய்திருப்பான்
விடியலைத்தேடி!
எண்ணங்களும் எதிர்பாரப்புகளும்
விளிம்பை மீறிப் பயணிக்கும்போது
சாதனைகளும் வெற்றிகளும்
தடம்மாறிப்போகும் பாதையில்லாமல்!
அப்போ மனிதம்
தன்னை மறந்து தவிக்கும்
நிம்மதியில்லா மனதோடு!
– கோவை சசிக்குமார்.