இலங்கையில் சிங்கள அரசினால் நடந்தேறிய ,நடந்துகொண்டிருக்கின்ற தமிழர்களுக்கு எதிரான பாரிய இனவழிப்பை பிற இன மக்களுக்கு எடுத்துக்காட்டும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரமாக தமிழ் மக்களால் நினைவு கூரப்படும் மே 12ம் திகதி தொடக்கம் 18ம் திகதிவரை பிரித்தானியாவில் சுழற்சி முறையிலான மாபெரும் துவிச்சக்கர வண்டி கவனயீர்ப்பு பேரணியொன்றை பிரித்தானியா வாழ் தமிழ் இளையோர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு நடாத்தி வருகின்றனர். இதன் ஆரம்ப நாளான மே 12ம் திகதி பிரித்தானியா பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக இருந்து மதியம் 12மணிக்கு ஆரம்பமாகி ஈஸ்ட்காம்(EASTHAM) எனும் இடத்தில் பி.ப 5.30 மணியளவில் முதல் நாள் துவிச்ணக்கர வண்டி பயணம் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.மேலும் இப் பேரணியில் கலந்து கொண்டவர்கள் இளைஞ்ஞர்களே மற்றும் இபேரணியின் போது இரத்ததானமும் சில இளைஞ்ஞர்களால் பேரணி சென்ற பாதையில் அமைந்துள்ள இரத்ததான மையத்தில் இரத்ததான வழங்கலையும் மேற்கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.