கண்ணீரிலே கதை சொல்லவா – என்
கார் இருளின் நிலை சொல்லவா
மண்ணிலே நிகழ்ந்த – எம்
மரணத்தின் வலி சொல்லவா
மங்கை தாலி அறுந்ததும் – எம்
மரண ஓலம் என் நிகழ்ந்ததும்
குண்டு கொத்தாய் குவிந்ததும் – என்
குழந்தை துடித்து இறந்ததும்
கண்ணீரிலே…..
கொத்து கொத்தாய் குண்டு மழையில்
குருதி நனைத்த எம் தேகம்
விட்டெறிந்த தீச்சுவாலையில்
வீழ்தெரிந்த எம் தேகம்
கண்ணீரிலே…..
காடையர்கள் ….. கரங்களிலே
துடி துடித்த எம் தேகம்…
கருணையுள்ள கருவறையில்
சிதைந்து போன எதிர்காலம்
சிதைந்து போன எதிர்காலம்
சிதைந்து போன எதிர்காலம்
கண்ணீரிலே…..
– நிலவன்