அவலத்தை எங்கு சொல்வோம்!
ஆண்டு இரண்டாயிரத்து ஒன்பது மே 18ல்!
இனசனம் இரத்தம் சிந்தி!
ஈழமே கண்ணீராச்சே!
உரிமைப்போரினை அறுக்கவென!
ஊதாரிப்படைகள் எல்லாம்!
எம்மவர் உயிரை காவு கொண்டார்!
ஏகமாய் மடிந்தோம் நாமே!
ஐநாவும் பார்கவில்லை!
ஒப்பாரி சத்தம் தானும்!
ஒநாய்கள் கேட்கவில்லை!
ஔவியம் கொண்ட நாட்டில்!
கருகியே உருகிகிச்செத்தோம்!
காலதேவன் எமை சூழ்ந்து!
கிரகணம் பிடித்தது போல்!
கீழ்திசை தொடங்கி இந்த!
குவலயம் வரையும் சொன்னோம்!
கூண்டோடு இலட்சோப மக்கள்!
கெடுபிடி அரசின் சூதால்!
கேள்விக்கே இடமே அன்றி!
கையிறவு செய்த போது!
கொடுங்கோலால் துவண்டு போனோம்!
கோரத்தை யார்தான் பார்த்தார்!
கௌரவம் உள்ள நாடுகள் எல்லாம்!
சந்ததிவதைகளையும்!
சாவுகளையும் கணக்கெடுக்கவில்லை!
சிகிச்சைக்கு எவரும் வரவில்லை!
சீக்கிரம் மருந்தும் தரவில்லை!
சுந்தரத்தமிழர் நாமோ!
சூழ்சியால் மாண்டுபோனோம்!
செல்லடிக்கணைகள் பட்டு!
சேய்களும் முதியோர் எல்லாம்!
சைனியம் சூழ்ந்து கொல்ல!
சொந்தமண் விதியாய் போச்சு!
சோகத்தை யார்தான் கேட்டார்!
சௌக்கிய வாழ்வை நோக்கி!
ஞாயிறை தேடுகின்றோம்!
தலைநிமிர்ந்து வாழ்வதற்கும்!
தாயக விடிவதற்கும்!
திக்கெலாம் புலம் பெயர்ந்து!
தீப்பந்தாய் உழைக்கின்றோமே!
துன்பத்தை துடைக்க வேண்டி!
தூய்மையாய் கொள்கை ஏந்தி!
தெம்புடன் ஒன்றாய் சேர்வோம்!
தேசியம் வெல்ல வைப்போம்!
தைரியம் கொண்ட நாங்கள்!
தொடக்கத்தை முடிவாய் மாற்ற!
தோழ்கொடுத்துழைப்போம் என்றும்!
தௌரிதமாகவே தான்!
நடந்ததை மறக்க மாட்டோம்!
நாட்டிலே தமிழர் என்போம்!
நினைவுகள் அழியாவண்ணம்!
நீத்தாரின் பெருமை காத்து!
நுட்பமாய் பணிகள் செய்வோம்!
நூறாயிரம் உறவின் இழப்பை!
நெஞ்சிலே பதித்து நாளும்!
நேரிய தமிழராவோம்!
நைதல்கள் கண்ட போதும்!
நொந்துபோய் கிடந்தபோதும்!
நோக்கத்தை விடவும் மாட்டோம்!
பட்டாசு கொளுத்தினார் பாதையெல்லாம்!
பால்சோறும் கொடுத்தும் மகிழ்ந்தார்!
பித்துப்பிடித்தவர்கள் பெரிதாகவிழா எடுத்தார்!
பீரங்கி குண்டுகளால் நாமழிந்தோம்!
புலியென தமிழரை பெயரிட்டார்!
பூர்வீக்குடிகளை பூண்டோடு அழித்தார்!
பெட்டிப்பாம்பாய் நாங்கள் இருந்தோம்!
பேய் அரசு செய்ததை பார்த்துக்கொண்டு!
பைத்தியம் பிடித்த மனதுடனே!
பொங்குதமிழரும் பொறுமை காத்தோம்!
போராடாமலே ஓய்ந்துருந்தோம்!
பௌத்த நாட்டின் மனப்பாங்கை!
மண்விடியலுக்காக மாற்றி!
மாண்புறு விடுதலை பெறுவோம்!
மிதவாத அரசியலாலும்!
மீண்டும் அறப்போர் செய்வோம்!
முள்ளிவாய்கால் நினைவு!!
மூலகாரணம்துக்கு நீதி கேட்டு!
மெய்யான சர்வதேச விசாரணையை!
மேதாவி நாடுகளிடம் கோருவோம்!
மைதானமுள்ளு வேலிக்குள்ளே!
மொசுப்பு காட்டிய காடையரையும்!
மோசடி வதைகள் செய்வோரையும்!
மௌனமாய் விடவே மாட்டோம்!
யம்மர்மன் வந்தாலுமே!
யாதனையை மறைக்க மாட்டோம்!
யுக்தியை நாங்கள் தானும்!
யூகித்து முன்னே சென்று!
யோக்கிய தீர்வை நோக்கி!
ரகசியம் காத்து நாளும்!
ராஐத்தந்திர செயற்பாட்டால்!
ரிஷபமாய் எழுந்து நின்று!
ரீதியின் போக்குடனே!
ருசுபமாய் ஒன்று சேர்ந்து!
ரூபமாய் இணைந்துழைப்போம்!
ரேகைகள் பார்கா வண்ணம்!
ரொம்பவும் எழுந்து நிற்போம்!
ரோஷமான உணர்வுடனே!
ரௌடித்தனத்தை உடைப்போம்!
லட்சோப லட்சம் கோடி அழிவுகளை!
லாவணி நிகழ்சியாக்கி!
லிசிதமாய் எழுதும் சிலரும்!
லீலைகள் செய்து வாழும்!
லேகியம் போன்றோரையும்!
லொசுக்கென மாற்றிடுவோம்!
லோகனில் பிறந்த நாமோ!
லௌசீகம் நீதி கேட்போம்!
வதை இல்லா வாழ்வுக்காக!
வான் உயர் சேவை செய்வோம்!
விடுதலை கிடைக்கும்வரை!
வீறுடன் எழுந்து நிற்போம்!
வெற்றிக்காய் வெறுப்பைப்போக்கி!
வேதனை களைந்து நாளும்!
வையத்தில் தமிழராவோம்!!
–<>~~~~~~~~<>~~~~~~~~~<>–
இது அகரவரிசையில். “அ”தொடக்கம்”வை” வரை உள்ளது
114,வரிகளைக்கொண்டது.
————————————-
கடந்த 2015/மே/18ல் எழுத்துருவில் கவிதையாகவும்,2016/மே/18ல் ஒலிப்பேளையாக இந்த காவியம் கிளிநொச்சியில் வெளியிடப்பட்டது.
****************************************