எம் இனப் பெண்களை
மானபங்கம்
செய்ததாக கூறி
கன்னி கழியாத பல
பெண்களை முதிர்கன்னி
ஆக்கியது உங்கள்
கவிகள்
போராட்டத்தில் வாழ்ந்த
வீரப்பெண்களை
சமூக வெளியில் இருந்து
வெளியே நிறுத்தி
”தீண்டத்தகாதவர்கள்”
என்ற சிந்தனையை
தோற்றுவித்தது
உங்கள் கவிகள்
உணர்ச்சியின் பெருக்கில்
தமிழனை உணர்ச்சிக்
குழம்பாக்கி
சிந்தனை செறிவை
மழுங்கடித்தது உங்கள் கவிகள்
கவிகள் எனப்படுவது
வேதனைகளை பரிசாக்கி
நம்பிக்கை சக்தியை
களைந்து சார்புநிலை
தோற்றத்தை
உருவாக்கியது
நடமாடும் கவி சிதறல்களே
உணர்ச்சியை, வேதனையை
ரணத்தை கீறி கீறி
பெரிதாக்கி தமிழனை
அடிமூடராக்கி எழுச்சி
பெற்று விடாமல் முடக்கி
கொல்லாமல்
நம்பிக்கை ஒளிகளை
ஏற்றிவையுங்கள்
இல்லையேல்
வன்னி மண்ணை
துயிலுரிக்கும் அனைத்து
கவிஞர்களையும்
வித்தாகிய
மாவீரரின் ஆத்மாக்கள்
மன்னிக்க போவதில்லை
காவியா
00.38
18/05/18
Ilford.