சிலவைத்தியர்கள் கூறுவதால் இன்றைய காலத்தில் எந்த நன்மையையும் அந்த மனிதனுக்கு கிடைக்கப் போவதில்லை.ஆக மனநலம் குன்றியதாக கூறிய நபரை பரிசோதனை செய்ததற்கான கட்டணத்தை அரசாங்கத்திடம் இருந்து வைத்தியரால் அறவிட மட்டுமே அவரால் முடியும். ஒரு மனிதனை பரிசோதனை செய்வதற்காக ஒரு மணித்தியாலத்திற்கு அந்த வைத்தியர் 300 பௌண்ட்ஸ்களை பிரித்தானிய சுகாதார திணைக்களத்தில் இருந்து பெற்றுக்கொள்கின்றார்.இந்த பணத்தினை பெற்றுக் கொள்வதற்காகவே ஒரே மாதிரியான மருத்துவ தகவல்களை தன்னிடம் வரும் நிரந்தர வதியுரிமை அற்ற அனைவருக்கும் வழங்குகின்றார். அதன் மூலம் வரும் பணத்தினை பெறுவதுடன் பல இளம் தலைமுறையின் தலையெழுத்தை மாற்றி சில வைத்தியர்கள் சிலர் சுகவாழ்க்கை வாழ பாதிக்கப்பட்ட எம்மவர்கள் மனநிலை தவறியவர்கள் என்ற பட்டத்துடன் எதுவுமற்றவர்களாக அடிமைகளாக வாழ்கின்றனர்.
சில கறுப்பாடுகளும் இளம் சமுதாயமும் – காவியா
புலம்பெயர் நாடுகளில் தமது வதிவுரிமைக்காக எம் மக்கள் எவ்வாறான கருத்துக்களை பதிவு செய்கின்றார்கள் இது ஐரோப்பிய பிரித்தானிய நாடுகளில் குடிவரவு குடியகல்வு திணைக்களம் எவ்வாறு நோக்குகின்றது என்பது பற்றிய விழிப்புணர்வு எங்களது (ஈழ) மக்களிடம் சரியாக இருக்கின்றதா? என்ற கேள்வியின் வெளிப்பாட்டிலேயே இந்தப் பதிவு இடப்பெறுகின்றது.
காலம் காலமாக எந்த ஒரு இனத்திற்கும் இல்லாத கொடுமையும் ஒற்றுமையின்மையும் எமது மக்களுக்கு அரங்கேற்றப்பட்டுக்கொண்டு இருக்கின்றது. எந்த ஒரு இனக்குழுவும் செய்யாத சில அசிங்கமான வேலைகளை எமது இனக்குழு செய்துகொண்டு இருக்கின்றது.இவ்வாறான அசிங்கமான நடவடிக்கையில் முன்னணி பெற்று விளங்குபவர்கள் புலம்பெயர் தமிழ்வாழ் சட்டத்தரணிகள் என்ற சிலரும் வைத்தியர்கள் சிலருமே.
புலம்பெயர்ந்து வரும் எம் மக்கள் ஆங்கில அறிவில் சிறந்து விளங்காத காரணத்தால் தமது மொழிதெரிந்த சட்டத்தரணிகள் என்ற போர்வையில் வாழும் அறிவுத்திறன் குறைந்த மனிதர்களை உண்மையானவர்கள் என்று முழுமையாக நம்பி தமது
வாழ்க்கையை அவர்களிடம் அடகு வைக்கின்றார்கள்.
புலம்பெயர் தேசத்தினை பொறுத்தவரை ஒரு மனிதனின் அடிப்படை அம்சமாக விளங்குவது
1) வதிவிட உரிமை
2)நிதி ஆலோசனை
புலம்பெயர்ந்து வரும் எம்மவர்களுக்கு வதிவிட உரிமைகள் பற்றிய சரியான தகவல்களை வழங்காமல் சட்டம் என்பது மக்களுக்கு சார்பானது என்பதனை தெளிவுபடுத்தாமல் சட்டத்தரணிகள் என்ற போர்வையில் வாழும் கறுப்பாடுகள்
செய்யும் அருவருத்தக்க செயற்பாடுகள் பற்றி நாம் கூறிட வேண்டும்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நான் ஒரு நிகழ்வுக்கு சென்று இருந்தேன் அங்கே சுமார் 22 வயதில் இருந்து 32 வயது வரையுள்ள இளைஞர்களும் யுவதிகளும் வருகை தந்து இருந்தார்கள். அவர்கள் அனைவரும் நிரந்தர வதியுரிமை அற்ற அல்லது குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் கையொப்பத்திற்கு அழைக்கப்படுபவர்களே. அவர்களது பலரது அகதி அந்தஸ்த்திற்கான விண்ணப்பங்களை பற்றிய கேள்விகளை தொடுத்து அவர்களிடம் ஒரு சிறு பரிசீலனை செய்தபோது அதற்குள் உள்ளடக்கப்பட்ட விடயமாக இருந்தவை
1)போரால் மனநிலை பாதிப்பு
2)தற்கொலை முயற்சி
3)தனி மனிதனாக செயற்பட முடியாத தன்மை
4)அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டதற்கான ஆதாரம்
5)போராட்டத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஈடுபட்டமை
6)புலம்பெயர்ந்து வந்தும் இங்கும் அரசியல் செயற்பாட்டில் ஈடுபடுதல்
மேலே குறித்த விடயங்களை அடிப்படையாக கொண்டு சம்பந்தப்பட்ட நபர்களின் அனுமதிப்பத்திரங்கள் குடிவரவு குடியகல்வு திணைக்களங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் போது இந்த விடயங்களை ஐரோப்பியாவில் உள்ள நாடுகள் எவ்வாறு நோக்குகின்றது என்ற விடயம் மக்களுக்கு சரியான விழிப்புணர்வில் காட்டப்படவில்லை என்றே நான் சுட்டிக்காட்டுகின்றேன்.
கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் இருந்த குடிவரவு குடியகல்வு சட்டமானது 2015 ஆம் ஆண்டு மாற்றம் கண்டு உள்ளது என்பதனை பிரித்தானியாவில் சிறந்த சட்ட வல்லுநர்கள் என்று கூறும் மார்தட்டும் பலர் அறிந்து கொள்ளவில்லை என்பதே உண்மையாகும். எமது மக்களின் வாழ்க்கையை தமது உறவுகளின் வாழ்க்கை என்று கவனத்தில் கொள்ளாமல் பணம் உழைக்கும் நோக்கில் பலரது வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் நடவடிக்கையை கண்கூடாக கண்டுகொள்ள முடிகின்றது.
பத்து வருடங்களுக்கு முன்னர் மனநிலை பாதிப்பு, தற்கொலை முயற்சி என்பவை போரின் உளவியலை பாதித்தாக எண்ணிய குடிவரவு குடியகல்வு திணைக்களம் இப்போதும் அதே கதையினை கூறுபவர்களை இந்த நாட்டின் பாதுகாப்புக்கு அல்லது சுகாதார செலவிற்கு காரணமானவர்களாக நோக்குகின்றது.
ஒரு மனிதன் அந்த நாட்டில் வாழும்போது தற்கொலை செய்ய போவதாக மிரட்டுவது அது அந்த நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படுத்தும் என்று கருதும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் எம் மக்களுக்கு வெளியில் தெரியாமலே அவ்வாறு கூறும் நபர்களை அந்த நாட்டினை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றது.
ஒரு நாட்டின் பொருளாதார நலக்கொள்கையை பற்றி நாம் பாட திட்டத்தில் படிக்கும் போது தற்கொலை வீதம் அதிகரிப்பு என்பது அந்த நாட்டின் தீமைகளின் ஒன்றாகவே கற்று இருந்தோம். அது மட்டுமன்றி தற்கொலை நிகழ்வில் ஈடுபடுவது சட்டத்திற்கு முரணான ஒரு நடவடிக்கை என்பதனையும் நாம் கற்று இருந்தோம். அன்று நாம் கற்று கொண்ட எதனையும் இப்போது கவனத்தில் கொள்ளாது நாமே தற்கொலை செய்ய போவதாக இங்கே உள்ள அரசாங்கங்களை மிரட்டுகின்றோம். இது அவர்கள் எமக்கு எதிரான நடவடிக்கை எடுக்க நாமே கொடுக்கும் ஆயுதம் என்பதனை உணர்ந்துவிட மறுக்கின்றோம்.எம்மை தவறாக வழிநடத்தும் மனிதர்களை தெய்வங்களாகவும் அவர்கள் சொல்வது அனைத்தும் வேதவாக்கு என்று நம்பும் தன்மையையே வைத்தியர்களது சட்டதரணிகளது தவறான வழிநடத்தல்களுக்கு காரணம் என்பேன்.
அதேபோல தன்னால் எதுவும் தனியாக செயற்பட முடியாது என்று கூறும் நபர்களை பிரித்தானிய நாட்டின் சுகாதார செலவிற்கு காரணமாக இருப்பவர்களாக எண்ணி அவர்களை இந்த நாட்டினை விட்டு வெளியேற்றிடவே பிரித்தானிய அரசாங்கம் விரும்புகின்றது. வைத்தியர்களாக இருக்கும் எம்மவர்களில் சிலர் ஒரு மனிதனுக்கு இல்லாத மனச்சிக்கல் இருப்பதாக கூறி அந்த நபரின் வாழ்விற்கு களங்கம் ஏற்படுத்துகின்றார்கள் என்பதனை அறியவில்லையா என்பதே எனது கேள்வியாகும். உண்மையிலேயே
மனநலம் சிறந்த ஒரு மனிதனை அவன் மனநலம் குன்றியவன் என்று
இப்படியாக தவறான ஆலோசனை வழங்குதலை தமது செயற்பாடாக கொண்டே பல சட்டத்தரணிகளும் வைத்தியர்களும் வாழ்கின்றனர்.
அதேபோல அரசியல் வேலைகளில் ஈடுபடும் நபர்களை அது இலங்கை பிரித்தானிய வெளிவிவகார கொள்கைக்கு பாதகமாக அமையும் என்ற தொனியில் இலங்கை அரசாங்கத்தின் கடுமையான எச்சரிக்கைக்கு அமைவாக அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டவர்களை பிரித்தானிய ஐரோப்பிய நாடுகள் நாடுகடத்தும் செயற்பாட்டில் ஈடுபடுகின்றது.
இப்படியாக ஒரு மனிதனின் வாழ்வில் அதிகூடிய தாக்கங்கங்களை ஏற்படுத்தக்கூடிய செயற்பாட்டில் ஈடுபடும் சட்டத்தரணிகள், பிழையான தகவல்களை வழங்கும் ஆலோசகர்களை களையெடுக்கும் நேரம் இது என்பேன்.
மதிப்பிற்குரிய மேதகு தலைவர் போராடி அந்த போராட்டத்தை அதியுயர் உச்சத்திற்கு கொண்டு சென்று எமது போராட்டத்தை இளைய சமுதாயத்தை நம்பி அவர்களிடம் ஒப்படைத்து அவர்கள் கரங்களை வலுவாக்க வேண்டும் என்று கூறிய அனைத்தையும் புறம்தள்ளி அறிவற்ற நிலையில் எம் போராட்டத்தை படுகுழியில் தள்ளும் அனைத்து சக்திகளுக்கும் எதிராகவே என் எழுத்தாணி எழுதிக்கொண்டு இருக்கும்
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்
ஒரு வதிவிட உரிமை மறுக்கப்பட்ட நபர் கடைசியாக எடுக்கக்கூடிய சட்ட நடவடிக்கையாக இருப்பது என்ன என்பதனையும் எம்மை இந்த நாட்டில் இருந்து வெளியேற்றி விடாமல் இருக்க நாம் என்னவிதமான பாதுகாப்பு சட்ட நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் என்பதனையும் அடுத்த பதிவில் எழுதுகின்றேன்.
அன்புடன்
காவியா