காலுடுத்தி ஒரு சூரியன் ஈழமண்ணில் நடந்ததென்றால்
அது பால்ராஜ் அண்ணனின் பாதங்களாயிருக்கும்
இவன் கண்பட்ட இடமெல்லாம் பகை புண்பட்டுப்போனதை
கொப்பேகடுவ தொடக்கம் பொன்சேகா வரை அறிவர்
உலகப்போரியலின் தந்திரக்காரர்களெல்லாம்
இன்றும் பிரமிக்கும் இமாலய போர்
குடாரப்பு தரையிறக்கம்
கட்டளையிடும் தளபதிமுதல் கட்டியிருந்த கழுசானும் அவிழ்ந்து விழ அன்று ஓட்டம் பிடித்த பகையிலாரும் எஞ்சியிருந்தால் கேளுங்கள்
பால்ராஜ் என்பவர் யாரெனப் புரியும்
வேண்டாம் இன்று பால்ராஜ் பெயரை கேட்டால்
ஒருவேளை அவர்களுக்கு
பக்கவாதம் வந்துவிடும்
சன்னங்களுக்கு மத்தியில்
படுத்துறங்கிய தானைத் தளபதிக்கு
சல்யூட் அடித்தார்களாம் சில கொழும்பு
இராணுவத்தினர்
துரோகத்தின் முந்தானையில் ஒழிந்தவர்கள்
பலரும் இவரின் கால்த் தூசிக்கும் நிகரில்லையென இப்போது புரிகிறது
அன்று அக்கினிப் புத்திரர்கள் நடந்துவந்த மண்ணில் இன்று விக்கித்து நிற்கிறது
விலைபோன அரசியல்
காலம் கனியும் அந்நாளில்
எங்கள் ஈழக் கோவிலில் உன் சிலை இருக்கும்
தலை வணங்குகிறேன் தளபதியே..!
-#அனாதியன்