உலகில் இன்று பிரதான இடத்தை வகிப்பவர்கள் வெள்ளையர்கள். உலகில் சக்தி மிக்க இடத்தில் இன்றும் இருப்பவர்கள் இவர்களே.
ஆனால் இன வெறி காரணமாக இலட்சக்கணக்கான மக்களை கொன்று அழித்தவர்களும் இதே மக்களே. ஒரு காலம் இருந்தது அது வெள்ளையர்கள் கருப்பு இனத்தவர் மீது கொண்ட வெறி பிடித்த காலம்.
அதனை வெறும் 13வயது சிறுவன் மாற்றியமைத்ததோடு ஓர் நாட்டின் சுந்திரத்திற்கும் காரணமாக அமைந்திருந்தான் என்பது பலர் அறியாத விடயம்.
இன்று பல்வேறு வகையாக சுதந்திரத்தலைவர்கள் பற்றி கற்பிக்கப்படுகின்றது. ஆனால் வரலாற்றில் இடம் பிடித்த பல சுதந்திர மாவீரர்கள் குறித்து பலர் அறிவதில்லை.
உலகம் முழுதும் ஓர் நிற அழிப்புகள் வெள்ளையர்கள் மூலம் பல காலம் தொடர்ந்து இடம் பெற்று வந்தன. இன்று அவை மாற்றப்பட்டுப் போயின என்றாலும் ஆங்காங்கே இந்த நிறப்பாகுபாடு இருக்கத்தான் செய்கின்றது.
அவ்வாறு ஓர் நிறப்பாகுபாடு அரங்கேற்றப்பட்ட காலம் 1970களில் உச்சகட்டமாக இருந்தது. ஆப்பிரிக்கர்களின் நிறம் கருப்பு என்பதற்காக கொன்று அழிக்கப்பட்டனர்.
இந்த அழிப்புக்கு பல்வேறு வகையான எதிர்புகள் வெளிவந்தன. 1796ஆம் ஆண்டு யூன் மாதம், ஆப்பிரிக்க இனத்தவர்கள் இந்த அழிப்புகளுக்கு எதிராக வீதியில் இறங்கி போராடினார்கள்.
அப்போது 13 வயதான பள்ளி மாணவனான ஹெக்டர் பீட்டர்சன் என்பவன், வீதியில் அமர்ந்து தன் போராட்டத்தை ஆரம்பித்தான். அவன் பின்னால் பலர் ஒன்று கூடினர்.
ஏற்கனவே நிற வெறியில் இருந்த வெள்ளையர்களுக்கு இந்த சிறு மாணவன் அச்சுறுத்தலாக மாறிப்போனான். அப்போது யாரும் எதிர்பாராத தருணம், வீதியில் அமர்ந்து போராட்டத்தை ஆரம்பித்த அவனை நோக்கி ஓர் துப்பாக்கி ரவை பாய்ந்து வந்து தாக்கியது.
அதனை சற்றும் எதிர்ப்பார்க்காத மக்கள் சிதறி ஓடத் தொடங்கினர். அந்த நேரத்தில் கீழே சரிந்த ஹெக்டர் பீட்டர்சனை ஒருவர் தூக்கிக் கொண்டு ஓடத்தொடங்கினார்.
அவருடன் பீட்டர்சனின் சகோதரியும் ஓடி வந்தார் இந்தக் காட்சியை அப்படியே புகைப்படமாக எடுத்தார் அப்போதைய புகைப்படக் கலைஞர் ஒருவர்.
நிற அழிப்பு அவலத்தை அப்படியே வெளிக்காட்டிய அந்த புகைப்படம், வெள்ளையர்களுக்கு பாரிய எதிராக மாறியது உலகம் முழுதும் அந்தப் புகைப்படம் பரப்பப்பட்டது.
நிற அழிப்புக்கு எதிரான சின்னமாக அந்தப் புகைப்படம் அறிவிக்கப்பட்டது. சிலைகளும் வைக்கப்பட்டது. அந்த புகைப்படத்தின் பின்னால் போராட்டங்கள் வெடித்தன.
அதனால் என்றும் இல்லாத அந்த மக்கள் ஒன்றிணைவு சாத்தியமாகியது சிறுவன் ஹெக்டர் பீட்டர்சனின் மரணத்தால். அதுவே கடைசியில் ஆப்பிரிக்க நாடுகளின் சுதந்திரத்திற்கும் வித்திட்டது.
ஓர் நாட்டிற்கே சுதந்திரம் பெற்றுக் கொடுக்கவும், கோடிக்கணக்கான உயிர்களையும் காத்த பெருமை 13 வயதான பீட்டர்சனுக்கு வந்து சேர்ந்தது.
அதனால் இன்றும் ஓர் மாவீரனாக, வரலாற்றை மாற்றியமைத்தவனாக ஹெக்டர் பீட்டர்சன் உலக மக்கள் மத்தியில் இடம் பிடித்துள்ளான். இன்றும் அவனது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இவனைப் போன்று சுதந்திரத்திற்காக போராடிய பல மாவீரர்கள் புதைக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் ஒரு வகையில் அவர்களுக்கு தீவிரவாதிகள் எனும் பட்டம் கொடுக்கப்படும்.
அல்லது வரலாறு மாற்றியமைப்பப்படும் எது எப்படியானாலும் தனக்காக அன்றி பொதுநலத்திற்காக, பிறருக்காக போராடுகின்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்களும் உன்னத மாவீரர்களே.