‘இன்புளுவன்ஸா வைரஸ்’ தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்ட 12 பேர் யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாள்களில் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களின் நோய் குறித்து மேலதிகப் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன என்று யாழ்ப்பாணப் பிராந்திய தொற்று நோய் தடுப்புப் பிரிவு அதிகாரி மருத்துவர் ஜி.ரஜீவ் தெரிவித்தார்.
‘‘பன்றிக் காய்ச்சல் எனப்படும் ‘இன்புளுவன்ஸா வைரஸ்’ தொற்றுக்கான அறிகுறிகளோடு கடந்த சில வாரங்களில் 12 பேர் அடையாளம் காணப்பட் டுள்ளனர். அவர்களின் குருதி மாதிரிகள் பெறப்பட்டு மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன.
தற்போதைய காலநிலை இந்த நோய் ஏற்படுவதற்கு வாய்ப்பாக இருக்கின்றது. 2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளிலும் இந்த நோய் தாக்கம் இனங்காணபட்டது. எனினும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது’’ என்று மருத்துவர் தெரிவித்தார்
தென்பகுதியில் அண்மையில் இந்த நோய் தாக்கம் இனங்காணப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்தே வடக்கில் இதற்க்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன.
இது காற்றால் பரவும் நோயாக இருப்பதால் பொது இடங்களுக்கு அனாவசியமாகச் செல்லுதல் மற்றும் சன நெரிசலான இடங்களுக்குச் செல்லுதல் என்பவற்றை இயன்றளவு தவிர்ப்பதோடு மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை
வழங்கியுள்ளனர்.v