முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் எட்டாவது ஆண்டு நினைவு நாள் எதிர்வரும் 18ம் திகதி முள்ளவாய்க்கலில் அனுஸ்டிக்கப்படவுள்ளது.
இந்த நிலையில் முள்ளவாய்க்கால் கிழக்கு, மேற்கு பகுதிகளை சுற்றியுள்ள கடற்படையினரின் கண்காணிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் பல்லாயிரக்கணக்காக பொதுமக்கள் கெடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு அப்பிரதேசத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இவ்வாறு பொதுமக்களின் உடலங்கள் அடக்கம் செய்யப்பட்ட பிரதேசத்தின் ஒரு பகுதி கடந்த எட்டு வருடங்களாக கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது.
இந்த நிலையில் கடற்படையினரின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் பொதுமக்கள் உள்நுளையக்கூடும் என்னும் சந்தேகத்துடன் அவர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.