ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையின் நினைவேந்தல் வாரத்தின் மூன்றாம் நாள் அஞ்சலி நிகழ்வுகள் மானிப்பாய் பிரதேசத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வட. மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோரின் பங்களிப்புடன் இடம்பெற்றன.
1995ஆம் ஆண்டு நவாலி சென்.பீற்றஸ் தேவாலயத்தின் மீது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட குண்டு விச்சுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவாலயத்தில் இன்றைய அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
மே 12ஆம் திகதிமுதல் எதிர்வரும் 18ஆம் திகதிவரை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வட.மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வுகள் பரவலாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.