தனிமையில் வாழ்பவர்களின் பாடு திண்டாட்டம் என்பது பொதுவான நியதி. ஆனால் அவர்கள் விரைவில் மரணம் அடைகிறார்கள் என்று புதிய ஆய்வு தெரிவிக்கிறது. டென்மார்க்கை சேர்ந்த கோபின் கேகன் பல்கலைக்கழக ஆஸ்பத்திரியை சேர்ந்த பயிற்சி மாணவர் அன்னி விண்கார்ட் கிறிஸ்டன்கன் இத்தகைய ஆய்வை மேற்கொண்டார்.
13,463 இருதய நோயாளிகள் இதில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களிடம் உங்களுக்கு எப்படி இருதய நோய் ஏற்பட்டது. உடல்நலமும், மனநலமும் பாதிக்கப்பட்டது ஏன். புகை பிடித்தல், மது அருந்துதல் மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் போன்றவற்றால் இருதயநோய் உண்டானதா? என்பன போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.
அதற்கு பதில் அளித்த அவர்கள் தனிமை கொடுமையால் தான் இத்தகைய நோய் ஏற்பட்டது என்றனர். தனிமையால் இருமடங்கு மனஅழுத்தம் மற்றும் அச்ச உணர்வு ஏற்பட்டு உடல்நலமும், மனநலமும் பாதிக்கப்படுகிறது.
இதேநிலை தொடரும் பட்சத்தில் அவர்கள் எதிர்பார்த்ததை விட முன் கூட்டியே மரணம் அடைகின்றனர் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.