தென் தமிழீழம், மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைப் பெருநிலம் பற்றுறுதி கொண்ட தமிழ் பழைமையூர் பசுமையூர் மகிழடித்தீவு கிராமம் இரத்த வெள்ளத்தில் மிதந்த நாள் ஆம் இன்றைக்கு 27 வருடங்களுக்கு முன்பு 1991 ம் ஆண்டு யூண்மாதம் 12,ம் திகதி இனவெறி கொண்ட இராணுவத்தினரின் கோரத்தாண்டவத்தில் மகிழடித்தீவு கிராமத்தில் உள்ள அப்பாவி பொதுமக்களை சுட்டுக்குவுத்னர்.
இந்த இனப்படுகொலாயால் சுமார் 65 பொதுமக்கள் படுகொலைசெய்யப்பட்டனர்.
அன்று மணல்பிட்டி சந்தியில் இருந்து உழவு இயந்திரத்தில் மண்முனை துறைக்கு றோந்து சென்ற படையினர் மீது விடுதலைப்புலிகள் மகிழடித்தீவு கொக்கட்டிச்சோலை பிரதான வீதியில் ஒரு கன்னி வெடித்தாக்குதலை நடத்தினர் இதில் சில இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் அதற்கு பழி தீர்க்கும் விதமாகவே ஆயுதங்களுடன் அத்து மீறி மகிழடித்தீவு கிராமத்தில் நுழைந்த கொலைவெறி படையினர் கண்டவர் நிண்டவர் ஆண் பெண் இளைஞர்கள் வயோதிபர் என கண்ணில் பட்ட அனைவரையும் சுட்டுத்தள்ளினர்.
சிலரை பிடித்துச்சென்று அந்த கண்ணி வெடி இடம்பெற்ற மடுவில் படுக்க வைத்து சுட்டனர் இந்த சம்பவத்தை நேரடியாக பலர் கண்டும் உள்ளனர்
இந்த படுகொலையை அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஜோசப் பரராச்சிங்கம் உடனடியாக பாராளுமன்த்தில் தெரியப்படுத்திது மட்டும் அன்றி ச்தேச நாடுகளின் கவனத்துக்கும் கொண்டுவந்தார்.
இதனால் இந்த மகிழடித்தீவு படுகொலைக்காக ஒரு விசாரனை குழ அமைக்கப்பட்டு அதில் உயிர் இழந்த உறவுகளின் உடன் பிறப்புகள் சாட்சியளுத்ததன் விளைவாக உயிர் இழந்தவர்களுக்கு மரணசான்றிதழ் மட்டும் வழங்கப்பட்டது இந்த படுகொலைக்கான நீதி 27 வருடங்கள் கடந்தும் இதுவரை கிடைக்கவில்லை.சிங்கள இராணுவத்தின் கோரத்தாண்டவம்.சட்டி தொப்பியுடன் அடோ,அடோ,கொட்டி,கொட்டி என்கின்ற சத்தம் மேலோங்கியது.வீடுகள் எரிந்து புகைமூட்டமானது மகிழத்தீவு.உயிரை காக்க கொக்கட்டிச்சோலைக்கு ஓடும் கூட்டம் ஒரு புறம், உறவை தேடி அலையும் கூட்டம் மறுபுறம்.
இந்த இன வெறியர்களின் வெறியாட்டத்தில் குமாரநாயகத்தின் அரிசி ஆலையில் இருந்த சிறுவர்கள்,முதியோர்கள்,பெண்களென வித்தியாசமில்லாமல்65க்கு மேற்பட்ட உயிர்களை நரபலியாடினர்.இதிலேதான் என்னை காலையின் உணவூட்டி,சீருடை அணிவித்து பாடசாலைக்கு வழியனுப்பிய என் அம்மாவெனும் தெய்வம்,எங்கள் குடும்ப குலவிளக்காய் பிரகாசித்த அக்கா,எங்கள் குடும்பம் முதல் முதல் கண்ட வாரிசு உலகமே தெரியாத மூன்று மாதங்கள் மட்டுமே நிரம்பிய அக்கா மகன் ஆகியோரும் பலியாகினர்.காலங்கள் பல கடந்து சென்றாலும் நாம் மறவோம் உங்கள் நினைவை அம்மா.சத்தமிட்டு கெட்ட நாய்கள் சாகடித்த போது என்ன நினைத்தீரோ?உங்கள் அனைவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.
மகிழடித்தீவு படுகொலை இதற்கு முன்பு கடந்த 28/01/1987ல் இடம்பெற்ற கொக்கட்டிச்சோலை இறால்பண்ணை படுகொலை என்பவற்றில் உயிர் நீத்த இரண்டு படுகொலைகளையும் நினைவுகூரும் விதமாகவே மகிளடித்தீவு சந்தியில் விடுதலைப்புலி களால் ஒரு நினைவுத்தூபி அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
1991. 06.12 அன்று
மகிழடித்தீவு கிராமம்
இரண்டாவது படுகொலையை
எதிர் கொண்டது.
எரிகிறது வீரம் நிறைந்த மண்
உருகிறது உயிர்கள்
கருகிறது உறவுகள்
ஓடுகிறார்கள் எம் மக்கள்
கதறுகிறார்கள் வாலிபர்கள்
பாதகர்கள் கையில் யுவதிகள்
சிக்குண்டு தவிக்கிறார்கள்.
தஞ்சமடைந்தனர்
ஞானமுத்து குமாரநாயகத்தின்
அரிசி ஆலையிலே
துப்பாக்கிக்கு இரையாகி
வெந்த அனலில்
கருகிப் போகியது
எம் உறவுகள்.
தாயவள் முலைப்பால்
ஊட்டிய நிலையிலே
தான் பெற்றெடுத்த
கைக்குழந்தையுடன்
கறைபடிந்திருந்தாள்
இறந்த உயிர்கள்
ஓவியங்களாகவே இருந்தன.
அன்றைய நாள்
இருட்டானது எம்மூர் மக்களுக்கு
நூற்றுக்கு மேற்பட்ட
உறவுகளை இழந்து நின்றோம்
கைக்குழந்தையும்
வயோதிபத்தையும்
பார்த்த வெறியர்கள்
அவர்களின் கால்களில்
நசிக்கினர் இவர்களை.
வேலிக்கம்பியினூடே
நகர்ந்த மக்கள்
உயிர்களை
அதன் முட்களில்
விட்டுப் புகுந்தனர்.
அன்றைய மாலை வேளையிலே
மீனாட்சியடி மடுவில்
எம் எதிரிகளால்
உயிருடன் எரிக்கப்பட்ட
எம் உறவுகளின்
இரத்தங்கள்
கறைபடிந்து நிற்கின்றது.
நடராசா. தர்சினி
மகிழடித்தீவு.