இன்னருவியின் காப்பரணுக்குள் இருந்து நாங்கள் புறப்பட்டுக்கொண்டோம். மாலைப்பொழுது மிகவும் அழகாக இருந்தது. சூரியனின் மிகவும் மெல்லிய பிரகாசமான ஒளிக்கதிர்கள் படர்கின்ற இடமெல்லம் மிகவும் அழகாகவே இருந்தன.
யுத்த முனையில் படர்ந்த பற்றைகளும் வெளியாக்கப்பட்ட பிரதேசங்களும் எதிரியின் எறிகணை வாய்களின் ஏப்பத்தால் தலையற்றுப் போன பனை மரங்களும் தென்னை மரங்களுமாக அனைத்தும் அந்த மாலை வெயிலின் மெல்லிய ஒளியில் மிகவும் அழகான இரசனை உணர்வை தந்து கொண்டிருந்தன. உயிர் அச்சுறுத்தல் நிறையப்பெற்ற ஒரு போர் முனையில் நாங்கள் எதிர்பார்த்திருக்காத அற்புதமான அழகிய இரசனை உணர்வு எங்களை ஆக்கிரமித்துக்கொள்ள நாங்கள் மனதார மகிழ்;ந்து கொண்டோம்.
போர் முனையை மரண களமாகவே சிந்திக்கும் சிந்தனைகள் உருக்குலைந்து விட அதன் அழகில் எங்களின் புலனைச் செலுத்திக் கொண்டிருந்தோம். சுடரோனும் எங்களைப் போலவே மாலைப் பொழுதை இரசித்திருக்க வேண்டும் அண்ண இந்த வெயிலுக்கு இஞ்சால பாருங்கோ என்ன வடிவாய் இருக்கு|| என்றவாறு போராளிகளின் முன்னரங்கக் காப்பரணின் பின்பகுதியை எங்களிற்குக் காட்டினான்.
நல்லாய் இருக்கு நாங்களும் அதைத்தான் பாத்துக்கொண்டு வாறம்|| என்றோம். திடீரென்று ஓரிடத்தில் நாங்கள் பயணித்துக் கொண்டிருந்த நகர்வகழியின் அகலம் மிகவும் பெரிதாக இருந்தது. ஒருவர் மட்டும் பயணிக்கக் கூடியதாக இருந்த அந்த நகர்வகழி இப்போது மிகவும்பெரிதாக இருந்தது. போர் முனையின் அழகை இரசித்தபடி வந்து கொண்டிருந்த எங்களிற்கு அந்த நகர்;வகழியின் தோற்றம் ஒருவித மாறுதலை ஏற்படுத்தியிருந்தது.
திடீரெனச் சுடரிடம் ன்ன சுடர் இப்பிடி இருக்கு|| என்று சொல்லியபடி நகர்வகழியின் இடிந்திருந்த பகுதியில் நின்றுவிட்டோம்.
அது தெரியும் தானே அண்ணா முகமாலை மண் இறுக்கம் குறைஞ்ச மண்தானே. அதால சின்ன அதிர்வுக்கும் இடிஞ்சு விழுந்து கொண்டிருக்குது|| என்று சொல்லிக்கொண்டிருந்தான்.
இது வெட்டிக்களகாலமோ என்றோம். ஓ மூவிங்ரேஞ் அடிச்சுக் கனகாலமாகிப் போச்சுது அதோட இதுகளுக்குள்ள அவன் அடிக்கிற செல்லுகளும் வீழ்ந்துவெடிக்கிறது அதால இப்ப மூவிங்ரோஞ் இடிஞ்சு பெரிசாகிப் போச்சுது என்றான்.
ஒராள் மட்டும் போகக்கூடிய மாதிரித்தான் இந்த மூவிங்ரேஞ் அடிச்ச நாங்கள். இப்ப பாருங்கோ ஒரு ஆட்டோ வடிவாய் போய்வரக்கூடிய மாதிரி வந்திட்டுது என்றான் பகிடியாக. ஷஷஅப்ப இனியென்ன திருப்பித்தான் எல்லாம் வெட்டவேணும் போல என்றோம். ஷஷஓம் அண்ணா இனி என்ன மழை முடியட்டும் யோசிப்பம் என்றான் அந்தப் போராளி. இப்படியே கதைத்தபடி நாங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம் நகர்வகழிக்குள்ளால நடந்துகளைத்து விட்டோம்.
வியர்வை எங்கள் ஆடைகளைப் பல தடவைகள் நனைத்து விட்டிருந்தன. மாலைப்பொழுது என்றாலும் வெயில் தனது பங்கை சரியாகவே செய்து கொண்டிருந்தது. நாங்கள் ஒரு காப்பரணிண் வாசலைச் சென்றடைந்தோம். அங்கு ஒரு மெல்;லிய கறுத்த சற்று உயரமான போராளி ஒருவன் அங்கு காப்பரணின் உள்ளே நிற்பது தெரிந்தது. காப்பரணுக்குள் இருள் சூழ்ந்து பகல் பொழுதை வழியனுப்பிக் கொண்டிருந்தது. அந்த மெல்லிய இருளிற்குள் அந்தக் காப்பரணுக்குள் இருந்த போராளியை அவதானிப்பதற்கு சற்றுக் கடினமாகவே இருந்தது. அவன் தனது உடலில் இயல்பான வர்ண அமைப்பைப் போலவே கறுத்த நிற ஆடைகளை அணிந்திருந்தான்.
என்ன தமிழவன் இருட்டுக்குள்ள உன்னக் கண்டு பிடிக்கிறது சரியான கஸ்ரம் போல கிடக்குதெடாப்பா எல்லாம் ஒரே கலறாய் இருக்குது என்று பகிடியாகக்; கூறிக்கொண்டான் சுடர். அது சரியடாப்பா ஏதோ பிறக்கேக்க நாங்கள் கொஞ்சம் கறுப்பாய் பிறந்திட்டம் அது இப்ப உங்களுக்கு எங்களக் கழட்டுறதுக்கு நல்ல சந்தாப்;பமாய் போச்சுது என்று கூறிக்கொண்டு எங்கள் அனைவரையும் பார்த்துச் சிரித்துக்கொண்டான். காகம் கறுப்பு எண்டபடியால் தான்; அதுக்கு இப்பவும் மரியாத இருக்குது விளங்குதோ? என்றான் தமிழவன்.
இப்பிடியே கதை தொடர அண்ணாக்கள் நீங்கள் உள்ளுக்க வாங்கோ பிறகு நான்தான் உங்களுக்கு மருந்தும் கட்ட வேண்டிவரும் அத விட நீங்கள் உள்ளுக்க வந்தால் சோலி இல்லத்தானே என்றான். நாங்களும் அதனுள் செல்ல எங்களை அந்தக் காப்பரணுக்குள் கூட்டிக்கொண்டு போய் பிளாஸ்ரிக் கதிரைகளில் அமர்த்தினான் தமிழவன். களமுனையில் இருப்பதற்கு பிளாஸ்ரிக் கதிரை கிடைத்தது எங்களிற்கு எதிர்பார்க்காத ஒரு சம்பவமாக இருந்தது.
காப்பரணிற்குள் நாங்கள் சென்றதும் அதன் சுவர்கள் அனைத்தும் விடுதலைப் போரில் எதிரிகளுடன் போரிட்டு மடிந்த மாவீரர்களின் படங்களால் நிரப்பப்பட்டிருந்தது. வரிசையாக மாவீரர்களின் உருவப் படங்கள் ஒட்டப்பட்டிருந்தன. மாவீரர்களின் உருவப்படங்கள் ஒட்டப்பட்டிருந்த பகுதிக்கு மேலாக விடுதலைப் போராளிகளிற்கு இருக்க வேண்டிய தகைமைகள் என்று பேனாவால் எழுதப்பட்ட ஆறு வரையறைகள் இருந்தன. தன்னலம் அற்றவனாக இருக்க வேண்டும் என்பது முதல் எதிரியிடம் பிடிபடும் சந்தர்ப்பத்தில் தன்னை அழித்துக்கொள்ளும் தைரியம் மிக்கவர்களாக இருக்கவேண்டும் என்பது வரை அந்த ஆறு வரையறைகளும் இருந்தன.
இவை சாதாரண ஒற்றை ஒன்றில் எழுதப்பட்டு மட்டையில் ஒட்டப்பட்டு காப்பரணின் சுவர்ப் பகுதியில் அமைந்துள்ள குற்றியில் ஆணியால் அறையப்பட்டிருந்தது. சாதாரண கடதாசியில் எழுதப்பட்டிருந்த இந்த வரையறைகளை அந்த மெல்லிய இருட்டில் மிகுந்த சிரமப்பட்டு வாசித்துக் கொண்டிருந்தோம். அப்போது ஷஷஅண்ணா டோச்லையிட் இருக்குது எடுத்துவாறன்; பொறுங்கோ என்ற தமிழவன் எங்களின் முன்னால் டோச்;சுடன் வந்து நின்றான். அந்த டோச்லையிட்டின் வெளிச்சத்தில் அங்கிருந்த ஏனைய அறிவுரைகளையும் படிக்கத் தொடங்கினோம். தமிழீழத் தேசியத் தலைவரின் வாசகம் ஒன்று இதற்கு அடுத்ததாக எழுதப்பட்டிருந்தது.
விழிப்புத்தான் விடுதலையின் முதற்படி என்ற வாசகம் எழுதப்பட்டு அதன் நடுவில் ஒரு கண்ணின் படம் வரையப்பட்டிருந்தது. அதனையும் பார்த்துவிட்டு எங்கள் பார்வையைச் சற்றுக் கீழே இறக்கிக்கொண்டோம் அதில் அலட்சியமும் அவதானிப் பின்மையும் இருந்தால் உங்கட உயிரையே காப்பாற்ற முடியாது பிறகு எப்படி மற்றவர்களின் உயிரைக்காப்பாற்றப் போகிறாய்ய என்று எழுதப்பட்டிருந்தது. இந்த வாசகத்தின் கீழ் தமிழீழத் தேசியத் தலைவர் என்று எழுதப்பட்டிருந்தது.
அதற்கும் அப்பால் பிறர் செய்வதில் எது உனக்குப் பிடிக்கவில்லையே அதனை நீ மற்றவர்களிற்கு செய்யாதேஎன்று நட்சத்திரக்குறி இடப்பட்டு அதற்கு நடுவில் இந்த வாசகம் எழுதப்பட்டிருந்தது. அதற்குச் சற்றுக் கீழே கொன்பியூசியஸ் என்று வாசகத்தின் உரிமை பொறிக்கப்பட்டிருந்தது. இப்படியே பெருமளவிலான சிந்தனைகளும் பயனுள்ள வாசகங்களும் விடுதலைப் போரில் விதையாகிப்போன மாவீரர்களின் உருவுப் படங்களும் அந்தக் காப்பரணை நிறைத்திருந்தன. ஒவ்வொரு படங்களையும் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க இடையில் வந்த தமிழவன் அண்ண அதில இருக்கிற பெடியனுக்கு நான் தான் மருந்து கட்டி அனுப்பின நான்.
இந்தப் போராளி எங்களோட தான் இருந்தவன் என்று மாவீரர்களின் உருவப்படங்களை ஒவ்வொன்றாய்க் காண்பித்துக் கூறிக் கொண்டிருந்தான். அந்தக் காப்பரண் மாவீரர் நினைவாலயம் போல காட்சியளித்தது. களத்தில் கிடைக்கின்ற மலர்களைப் பறித்து மாவீரர்களின் படங்களிற்கு சாத்திவைத்திருந்தார்கள். அதனைப்பார்க்கின்ற போது மனதைப் பறித்துக்கொண்டிருந்தோம். ஓரிடத்தில் எம்மையும் எமது இனத்தையும் எமது இலட்சியத்தையும் ஏமாற்ற நினைப்பவர்கள் நிச்சயம் ஒரு நாள் ஏமாருவார்கள் என்ற வாசகம் ஒன்று மாவீரர்களின் படங்களிற்கு மத்தியில் எழுதப்பட்டு ஒட்டப்பட்டிருந்தது. அதன் நிறைவில் த.தமிழவன் தமிழீழ விடுதலைப்புலிகள், வடபோர்முனைக் கட்டளைப்பணிகம், முகமாலை என்று எழுதப்பட்டிருந்தது.
மிகவும் நல்ல சிந்தனையை ஏற்படுத்தும் உணர்வு சார்ந்த வாசகங்களால் அந்தக் காப்பரண் புத்தொளி பெற்று ஒளி வீசிக்கொண்டிருந்தது. இவற்றையெல்லாம் பார்த்து விட்டுத் தமிழவனிடம் ஷஷநல்லாயிருக்குது என்று கூறிக்கொண்டோம். நன்றி அண்ண என்றான். எங்களுக்கு மாவீரர்களின்ர படங்கள் இருந்தால் அடுத்த முறை வரேக்க கொண்டுவந்து தருவீங்களா? என்றான். அண்ண இஞ்ச லையினில மாவீரர் படங்கள் பேப்பரில வந்தால் அந்தப் படங்களை எடுக்கிறதுக்கு அடிபடுவாங்கள் என்றான். அப்ப உங்களுக்கு எப்பிடி இவ்வளவு படங்கள் கிடைச்சது என்று கேட்டோம். நான் படங்கள் எடுக்கிறதுக்கு எங்களின்ர பெடியளோட எவ்வளவு சண்டை பிடிச்ச நான் எண்டுறது எனக்குத்தான் தெரியும்; என்று சொல்லி முடித்தான் அவன்.
அண்ண மறக்காமல் அடுத்த முறை வரேக்க படங்களோட வாங்கோ என்று மீண்டும் ஒரு தடவை தமிழவன் தனது கோரலை எங்களிற்குச் சொல்லி நினைவுபடுத்தினான். அந்தக் காப்பரண் முகமாலைக் களமுனையின் கொம்பனி மருத்துவக் காப்பரண். அங்கு மருந்துப் பொருட்கள் வகை வகையாக அடுக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு மருந்துப் பொருட்களையும் எடுத்துக் காட்டிய தமிழவன் அவற்றின் வகைகள் எதற்குப் பயன்படுத்துவது என்பது தொடர்பான விபரங்களை சொல்லிக் கொண்டிருந்தான். அவனின் மருத்துவம் தொடர்பான விரிவுரைகள் நிறைவடைய இருங்கோ வாறன் என்றவன் அருகில் இருந்த பதுங்கு குழிக்குள் சென்றவன் வரும்போது கையில் ஒரு தட்டுடன் வந்தான். அந்தத் தட்டில் பனங்காய் பணியாரம் இருந்தது.
களமுனையில் பனங்காய்ப் பணியாரமா? எங்களால் நம்பிவிட முடியவில்லை ஆனாலும் எங்களின் முன்னால் இருந்த தட்டும் அதன் வாசனையும் எங்களை நம்பவைத்தபடியே இருந்தன. அதற்கிடையில் பிளேன்ரியும் வந்துவிட தமிழவன் சொன்னான் அண்ண பிளேன்ரியும் வந்திட்டுது இனி ஏன் பாத்துக் கொண்டிருக்கிறியள் என்று எங்களின் நாவின் துடிப்பை உணர்ந்தவன் போல சொல்லிக்கொண்டான். நாங்கள் அனைவரும் சேர்ந்து பனங்காய் பணியாரத்தைச் சுவைத்தபடி தேநீரையும் அருந்திக்கொண்டோம்; பனங்காய் பணியாரம் எங்காலான் என்று கேட்க ஷஷநாங்கள் இஞ்சதான் செற்றப் பண்ணின நாங்கள் நீங்கள் வருவீங்கள் எண்டு தெரிஞ்சிருந்தால் நாங்கள் இன்னும் செற்றப் செய்திருப்பம் என்றான். களமுனையில் எங்களிற்குக் கிடைத்த பனங்காய் பணியாரம் அந்த மாதிரியிருந்தது.
அதன் சுவை களமுனைப் போராளிகளால் தயாரிக்கப்பட்டதைப் போல இல்லாது வீட்டில் தயாரிக்கப்பட்டது போல இருந்தது. என்ன தமிழவன் இது வீட்டில செய்தது மாதிரி இருக்குது என்றோம். ஷஷ இஞ்ச வாங்கோவன என்றவன் எங்களை இத்தகைய பணியாரங்கள் தயாரிப்பதற்காக அமைக்கப்பட்ட பதுங்குகுழி ஒன்றிற்குள் எங்களை கூட்டிக்கொண்டு சென்றான். அதற்குள் தாச்சிகள், கரண்டிகள். உப்பு, புளி என்று அனைத்தும் தயாராய் இருந்தன. நீங்கள் நல்ல வசதியாய்த் தான் இருக்கிறியள் என்று சொல்லிவிடச் சிரித்த தமிழவன் பஞ்சி பாக்காட்டில் வடிவாய் எல்லாம் செய்யலாம் என்றான். இதுகளுக்கு சாமானுகள் எப்பிடி எடுக்கிறியள் என்றோம். அதுகள் தெரியும் தானே நாங்கள் அப்பிடி இப்பிடி பலமாதிரியும் எடுக்கிறது என்றான். எந்த நேரமும் முன்னரணில் விழுப்புண் ஏற்கும் போராளிகளிற்கு வைத்தியம் செய்வதற்குத் தயாராய் அந்தக் காப்பரணும் போராளி தமிழவனும் தயாராய் இருந்தார்கள்.
இருபத்திநான்கு மணிநேரமும் விடுதலைக்காக இயங்கிக்கொண்டிருக்கும் அந்த மருத்துவக் காப்பரணில் இருந்து இருள்கிழ்ந்த அந்தப் பொழுதுகளுக்குள்ளால் எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம்.
தொடரும்…..