ஓடி ஓடி உழைத்தாலும்
ஓய்வெடுக்க நேரமில்லை
தேடல் மட்டும் ஓயவில்லை
தேய்கிறது நேர காலம் !
தேவைகள் உள்ள போது
தீர்த்து வைக்க வசதியில்லை
வசதிகள் அமைந்த போது
தேவைகளோ காலாவதி !
காலை முதல் மாலை வரை
கடிகாரத்தை மிஞ்சிய ஓட்டம்
வாழ்க்கைக்குப் பணம் தேடி
வாழ்வைத் தொலைத்து ஓட்டம் !
உறவுகள் கூட இருந்தும்
உணர்வு பரிமாற முடியவில்லை
அயலவரையும் அறியாமால்
அவசர யுக வாழ்க்கை இன்று !
எங்கே போகிறது மனிதம்
என்று சிந்திக்கவும் நேரமில்லை
இயந்திர யுகத்தில் சிக்கி
வாழ்வின் பொழுதுகளும் கரைகிறது !
– வேலணையூர் ரஜிந்தன்.