வடமாகாண திணைக்களத்தின் கீழ் உள்ள நீர்பாசன திணைக்களத்தின் அலுவலகம் மாங்குளத்தில் 18.06.18 அன்ற திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு கட்டடத்தினை திறந்துவைத்து உரைநிகழ்திய வடமாகாண முதல்வர் அவர்கள்….
இதுவரை காலமும் கிளிநொச்சி நகருக்கு அண்டிய பகுதியில் செயற்பட்டுவந்த நீர்ப்பாசன திணைக்களம் இன்று மாங்குளம் பகுதியில் 18.06.18 அன்று திறந்துவைக்கப்டப்டுள்ளது வரவேற்கத்தக்கது.
இந்த புதிய கட்டடிம் தொடர்பான விபரங்களை தந்துதவுமாறு கோரப்பட்ட போது அதனை சமர்ப்பித்தவர்கள் தமது திணைக்களத்தின் திட்ட முன்மொழிவு ஒன்றை அனுப்பிவிட்டு கடமைகள் முடிந்துவிட்டதாக அமர்ந்துள்ளார்கள் சில விபரங்கள் கேட்டிருந்தேன் தரவில்லை ஏதோ அவர்களுக்கு இங்கு வருவது பிடிக்கவில்லைபோல் இருக்கு பொறுப்புவாய்ந்த திணைக்கள அதிகாரிகளும்,உத்தியோகத்தர்களு ம் முனைப்புடன் செயற்படுகின்றபோது அத்திணைக்களம் வினைத்திறன் மிக்க திணைக்களமாக மிளிரும் என்பதில் ஜயம் இல்லை.
நீர்பாசன திணைக்களத்தினை பொறுத்தமட்டில் வடமாகாணத்தின் மத்திய பகுதியான மாங்குளம் பகுதியில் அமைந்திருப்பது சால சிறந்தது என்ற தீர்மானத்தின் அடிப்படையில் இந்த திணைக்களம் மாங்குளம் பகுதிக்கு இடம்மாற்றப்பட்டுள்ளது.
யாழில் பிறந்து வளர்ந்த அலுவலகர் சிலர் வன்னிக்குள் அலுவலகங்கள் அமைவது ஒரு வதை என்று நினைக்கின்றார்கள். வாழ்கைபூராகவும் கூண்டு ஒன்றுக்குள் அடங்கி கிடப்பதையே நினைக்கின்றார்கள் அந்த நிலை மாறவேண்டும் 42.55 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட இந்த கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஜங்கரநேசன் விவசாய அமைச்சராக இருந்த காலத்தில் நடைபெற்றது.
நீர்பாசனத்தை பொறுத்தமட்டில் அதன் அமைவிடம் மாங்குளத்தில் இருப்பதுதான் சால பொருத்தமானது இந்த பகுதியில் நீர்பாசன குளங்கள் அதிகமாக காணப்படுகின்றன அதனால் அவற்றை நேரில் சென்று பார்வையிடுவதற்கும் நீர்பாசன செயற்பாடுகள் முறையாக நடைபெறுகின்றதா என்பதை பார்வையிடுவதற்கும் இந்த இடம் இலகுவானதாக அமையும் என்று நம்புகின்றேன்
இன்றைய காலநிலையினை பொறுத்தமட்டில் வடக்கில் பெறப்படுகின்ற ஒவ்வொரு துளி நீரும் முறையாக பயன்படுத்தப்படவேண்டிய கட்டாய சூழ்நிலையில் நாம் இருக்கின்றோம் மகாவலி நீர்தருவதாக கூறி ஒரு சொட்டு நீர்கூட இதுவரை கிடைக்கவில்லை
வடக்கில் ஆண்டுதோறும் கிடைக்கப்பெறுகின்ற ஆயிரத்தி இருநூற்றி ஜம்பது மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி கூட தற்போது கிடைக்கப்பெறுவதில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்ற இந்த நிலையில் கிடைக்கின்ற நீரை சரியாகதேக்கிவைக்காது குறுகிய காலத்தில் எமது பகுதிகள் வரண்ட பிரதேசமாக மாற நாமே வளிசமைப்பதாக அமையும்.
மன்னர் பராக்கிரமபாகு ஒரு சொட்டு நீரைகூட கடலில்கலக்க விடாதீர்கள் என்று சொல்லி சென்றுவிட்டார்
இன்றைய காலகட்டத்தில் நாங்கள் பழைமையினையும் மதிப்பதில்லை நவீன ஆலோசனையினையும் கேட்பதில்லை பின்னணியில் சிலரின் சுயநலம் காணப்படுகின்றதோ என்று கேட்கவேண்டியதாக இருக்கின்றது.
இந்தபகுதியில் அதிகளவான நிலங்கள் விவசயா செய்கைகளுக்கு பயன்படுத்தக்கூடியதாக காணப்படுகின்றபோது மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் வனஇலாக,வனயீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம்,கனியவளதிணைக்களம், கடலோரபாதுகாப்பு திணைக்களங்கள் இணைந்து முட்டுக்கட்டை போட்டுள்ளன அரசகொள்கைளளுக்கு அமைவாக பலகாணிகள் காடுகளாக பராமரிக்கப்படுவதற்கு பல திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது.
காடுகள் பலவகை உண்டு சரணாலயங்களுக்கு மக்கள் செல்லலாம் தேசிய பூங்காங்களுக்கு செல்ல அனுமதி பெறவேண்டும் வன இலாக தேசிய பூங்காக்களை எமது பிரதேசங்களில் நிறுவி மக்களை உள்நுளையவிடாமல் தடுக்கப்பார்ப்பதாக தெரிகின்றது. இதந் அலுவலகங்களின் நிர்வாகம் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் தொடர்ந்தும் இருந்து வருகின்றது.
எமது காடுகளில் என்ன நடக்கின்றது என்பது எமக்கு தெரிவதில்லை அண்மையில் வெலிஓயோ மணலாற்று காட்டிற்குள் அணை ஒன்று கட்டி இருப்பது அதனை கட்டி பல மாதங்களுக்கு பின்னர்தான் எமக்கு தெரியவந்தது யார் கட்டினார்கள் என்பது பற்றி இன்றும் புதிராக இருக்கின்றது.
நாட்டின் ஏனைய பகுதிகளுக்குமான காடுகளை வடபகுதியில் பாதுகாத்து வைத்திருக்க அரசாங்கம் முனைகின்றது.
அங்கெல்லாம் காடுகளை அழிக்கின்றார்கள் இங்கு மக்களின் நிலங்களை காடுகளாக்கின்றார்கள் இது இப்பகுதியில் வாழ்கின்ற மக்களின் சுய உரிமையினை மீறுவதாக அமைகின்றது எமது காடுகள் காணிகள் எமக்கே உரியவை அது முழுமையக மக்களிடம் கையளிக்கப்படவேண்டும்
எமது காடுகளையும் வனஜீவராசிகளையும் பாதுகாக்கவும் பரிபாலனம் செய்யவும் மாகாணத்திற்கு வெளியில் இருந்து அலுவலகர்களை கொண்டுவருவதை அரசு நிறுத்தவேண்டும்
இன்றைய நிலையில் தமிழ்மக்கிளன் தேவைகள் அனைத்தினையும் அவர்கள் போராடி பெறவேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இருக்கின்றார்கள் அவர்களுக்கு கிடைக்கவேண்டிய முறையான உரித்துக்களை கையளிக்க பின்னிக்கின்றார்கள்.
அண்மையில் ஊடகங்களில் வெளிவந்த ஒரு செய்தி இராணுவ தளபதி அவர்களின் சேவையினை பாராட்டி கௌரவித்து மலர்மாலை அணிவித்து பல்லாக்கில் ஏற்றிவந்து விடைகொடுத்துள்ளதாக வெளிவந்துள்ளது.
அவர்கள் அவ்வாறு நடந்திருந்ததற்கு இயல்பாகவே அந்த அதிகாரி நல்ல குணங்களை கொண்டிருந்தாரா?
அல்லது அவ்வாறு இயங்குமாறு பணிக்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய அவர்கள் செயற்பட்டார்களா என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.
ஆனால் அவரால் செலவிடப்பட்ட அபிவிருத்திப்பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் எங்கிருந்து வந்தன என்பது பற்றி எதுவுமே கூறப்படவில்லை
உதாரணமாக முன்பள்ளி ஆசிரியர்கள் வடமாகாணத்தில் ஆறாயிரம்ரூபா சம்பளம் வளக்கப்பட்டுள்ளது. ஆனால் சிவில் பாதுகாப்பு திணைக்களம் முப்பதாயிரம்ரூபா வழங்கியுள்ளது.
இந்த நிதி இதற்கென படையினருக்கு ஒதுக்கிவைத்த பணமாக இருக்கமுடியாது இவ்வாறான செலவுகளில் வெளிப்படை தன்மை இல்லாததால் படையினர் திட்டமிட்டே ஜந்து மடங்கு சம்பளம் கொடுத்து எமது மக்களை விலைக்கு வாங்குகின்றார்களோ என்று எண்ணவேண்டியுள்ளது அவர்களுக்கான மேலதிக பணம் எங்கிருந்து கிடைக்கப்பெற்றுள்ளது என்பது பற்றி படையினர் விரிவாக எமக்கு தெரியப்படுத்தவேண்டும் இந்த நிதிகள் வடமாகாண சபைக்கு வழங்கப்பட்டிருப்பின் அல்லது வடமாகாண சபையின் ஒத்திசைவோடு மத்தியஅரசினால் மேற்கொள்ளப்பட்டிருப்பின் எம்மக்களை மத்திய அரசு விலைக்கு வாங்கும் கைங்கரியமாக அமைந்திருக்காது.
போரில் எதுவிதவேறுபாடுகள் இன்றி தயவு இரக்கம் இன்றி கொத்துக்கொத்தாக கொன்று குவித்த நிகழ்வுகளை நேரில் பார்த்த எவருக்கும் அவை மறந்து போய்விடவில்லை அவ்வளவு உயிர்களையும் காவு கொள்வதற்கு தான் சார்ந்த அமைப்பு காரணமாக இருந்தது என்ற கவலை குறித்த படையினருக்கு இருந்ததோ என நான் அறியேன் இவ்வாறு இருந்திருந்தால் அந்த நினைவு வாழ்நாள் முழுவதும் வாட்டி வதைக்கும் என்று எதிர்பாக்கின்றேன் அதன் அடிப்படையில் தங்களின் தவறுகளை சீர்செய்வதற்கும் அல்லது இறை மண்டாட்டத்தினை மேற்கொள்வதற்கும இவ்வாறான தார்மீக சிந்தனைகள் அந்த அலுவலகரிடம் தோற்றம் பெற்றிருக்ககூடும் என்பதை நாம் உணரவேண்டும் எது எவ்வாறாயினும் அங்கே பலவிதமான கேள்விகள் பதிலிருக்கப்படவேண்டி இருக்கின்றது என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.