வடக்கில் தமிழ்மக்கள் மனங்களில் இன்னும் இடம்பிடிக்காத நிலையில்தான் மக்கள் பிரதிநிதிகள் காணப்படுகின்றார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக வன்னியில் நடைபெற்ற கேணல் ரத்தினப்பிரியாவின் பிரியாவிடை நிகழ்வு எடுத்துக்காட்டுகின்றது.
இன்னும் 350 முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்பினை சிவில் பாதுகாப்பு திணைக்களம் வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவில் பாதுகாப்பு திணைக்களம் இலங்கையின் படை கட்டமைப்பின் கீழ் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது என்பது யாரும் அறிந்த உண்மை படையினரிடம் வேலைவாய்ப்பிற்காக கையேந்தும் நிலைக்கு இன்று முன்னாள் போராளிகள் மற்றும் இளைஞர் யுவதிகள் தள்ளப்பட்டுள்ளார்கள் என்றால் அதற்கு யார் காரணம் என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் உங்களிடமே கேட்கவேண்டிய கேள்வி.
விடுதலைக்காக போராடிய இனம் பல தியாகங்களை அர்பணிப்பு செய்தவர்கள் வலிகளை சுமந்தவர்கள் வடக்கில் ஏன் தமிழின படுகொலை புரிந்தவர்களுடன் நிக்கின்றார்கள் என்று கேட்டால் தற்கு தமிழ்மக்கள் பிரதிநிதிகள் பதில்சொல்லியே தீரவேண்டும்.
மறைக்கப்பட்ட பல உண்மைகளும் கசப்பான அனுபவங்களையும் போரின் அழித்துவிட முடியாத குறிகளையம் வைத்துக்கொண்டு இன்று குறிசுட்டவனுக்கு பின்னால் நிக்கின்றார்கள் என்றால் ஏன் என்பதை உலகத்தில் வாழ்கின்ற அனைத்து தமிழ்மக்களும் எண்ணிப்பார்க்கவேண்டும்?
உலக அரங்குகளுக்கு சென்று தமிழர்களின் போராட்டத்தையும் அவர்களின் வாழ்வியலையும் பறைசாற்றுகின்ற மக்கள் பிரதிநிதிகள் ஏன் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களின் வாழ்வியலுக்குள் செல்லவில்லை?
அரசியல் பிளைப்பாளிகளாக இருக்கும் தமிழ் அரசியல் வாதிகள் ஏன் தமிழர்களின் விடிவிற்காக முன்னாள் போராளிகளின் வாழ்விற்காக வாழ்வாதார செயற்பாட்டிற்காக செயற்படவில்லை?
தங்கள் சுயநலத்திற்காக தங்கள் குடும்ப சுகபோகத்திற்காக ஒருசில முன்னாள் போராளிகளை வைத்திருக்கும் சில அரசியல் வாதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இன்னும் கீழ்மட்டத்தில் உள்ள மக்களை ஏன் சந்திக்கவில்லை.
அரசியல் வாதிகளின் அரசியல் நிகழ்வுகளுக்கு செலவு செய்பவர்களையும் தங்கள் நிதிதியில் முன்னின்று நடத்த வருபவர்களையுமே இன்று வடக்கில் தமிழ்மக்களின் பிரதிநிதிகள் முன்னாள் போராளிகள் என்ற பெயரில் வைத்திருக்கின்றார்கள்.அவர்களை வைத்து அரசியல் இலாபம் தேடிக்கொண்டு இருக்கின்றார்கள்.
இன்று முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்பவர்கள் தங்களுக்கு என்று தென்னைந்தோட்டம் வாங்குபவர்களும் தொழில் நிறுவனங்களை பதிவுசெய்து அதனூடாக வெளிநாட்டு பணத்தினை பெறுபவர்களும் பொது காணியினை பிடிப்பவர்களும்தான் தமிழ்மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லி அரசியல் நடத்திக்கொண்டிருக்கின்றார்கள்.
இன்று முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் முன்னர் விடுதலைப்புலிகளின் நிதிப்பிரிவு பொறுப்பாளர் குட்டி அண்ணன் அவர்கள் வைத்து கையாண்ட நூறு ஏக்கருக்கம் அதிகமான விவசாய பண்ணையும் அதில் வேலைசெய்யும் முன்னாள் போராளிகளும் இன்னும் அவர்களிடம் வேலை தேடிச்சொன்று கொண்டிருக்கின்றார்கள் என்றால் இந்த சிவில் பாதுகாப்பு திணைக்களம் வைத்திருக்கும் அனைத்து காணிகளும் இடங்களும் முன்னர் விடுதலைப்புலிகள் செய்த விவசாய பண்ணைகளாகவே காணப்பட்ட அவற்றை அரசாங்கத்துடன் பேசி கதைத்து அதே பண்ணையில் மக்களுக்கு வேலை வாய்ப்பினை ஏன் வழங்கமுடியாது.
குறித்த அதே நிதியினை அரசிடமோ அல்லது வெளிநாட்டு நிறுவனத்திடமோ பெற்று அதனை நடத்துவதற்கு விரும்பாத அரசியல் வாதிகள்தான் இன்று மக்கள் பிரதிநிதிகளாக இருக்கின்றார்கள்.
இன்னிலையில் 18.06.18 அன்று மாங்குளத்தில் நடைபெற்ற நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் அவர்கள் இந்த சிவில் பாதுகாப்பு திணைக்களம் தொடர்பில் பல கருத்துக்களையும் கேள்விகளையும் முன்வைத்துள்ளார்.
இந்த நிதி தொடர்பில் படையினர் விளக்கம் தரவேண்டும் என்ற கோரிக்கையினையும் முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தெரிவிக்கையில் அண்மையில் ஊடகங்களில் வெளிவந்த ஒரு செய்தி இராணுவ தளபதி அவர்களின் சேவையினை பாராட்டி கௌரவித்து மலர்மாலை அணிவித்து பல்லாக்கில் ஏற்றிவந்து விடைகொடுத்துள்ளதாக வெளிவந்துள்ளது.
அவர்கள் அவ்வாறு நடந்திருந்ததற்கு இயல்பாகவே அந்த அதிகாரி நல்ல குணங்களை கொண்டிருந்தாரா?
அல்லது அவ்வாறு இயங்குமாறு பணிக்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய அவர்கள் செயற்பட்டார்களா என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.
ஆனால் அவரால் செலவிடப்பட்ட அபிவிருத்திப்பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் எங்கிருந்து வந்தன என்பது பற்றி எதுவுமே கூறப்படவில்லை
உதாரணமாக முன்பள்ளி ஆசிரியர்கள் வடமாகாணத்தில் ஆறாயிரம்ரூபா சம்பளம் வளக்கப்பட்டுள்ளது. ஆனால் சிவில் பாதுகாப்பு திணைக்களம் முப்பதாயிரம்ரூபா வழங்கியுள்ளது.
இந்த நிதி இதற்கென படையினருக்கு ஒதுக்கிவைத்த பணமாக இருக்கமுடியாது இவ்வாறான செலவுகளில் வெளிப்படை தன்மை இல்லாததால் படையினர் திட்டமிட்டே ஜந்து மடங்கு சம்பளம் கொடுத்து எமது மக்களை விலைக்கு வாங்குகின்றார்களோ என்று எண்ணவேண்டியுள்ளது அவர்களுக்கான மேலதிக பணம் எங்கிருந்து கிடைக்கப்பெற்றுள்ளது என்பது பற்றி படையினர் விரிவாக எமக்கு தெரியப்படுத்தவேண்டும்
இந்த நிதிகள் வடமாகாண சபைக்கு வழங்கப்பட்டிருப்பின் அல்லது வடமாகாண சபையின் ஒத்திசைவோடு மத்தியஅரசினால் மேற்கொள்ளப்பட்டிருப்பின் எம்மக்களை மத்திய அரசு விலைக்கு வாங்கும் கைங்கரியமாக அமைந்திருக்காது.
போரில் எதுவிதவேறுபாடுகள் இன்றி தயவு இரக்கம் இன்றி கொத்துக்கொத்தாக கொன்று குவித்த நிகழ்வுகளை நேரில் பார்த்த எவருக்கும் அவை மறந்து போய்விடவில்லை அவ்வளவு உயிர்களையும் காவு கொள்வதற்கு தான் சார்ந்த அமைப்பு காரணமாக இருந்தது என்ற கவலை குறித்த படையினருக்கு இருந்ததோ என நான் அறியேன் இவ்வாறு இருந்திருந்தால் அந்த நினைவு வாழ்நாள் முழுவதும் வாட்டி வதைக்கும் என்று எதிர்பாக்கின்றேன் அதன் அடிப்படையில் தங்களின் தவறுகளை சீர்செய்வதற்கும் அல்லது இறை மண்டாட்டத்தினை மேற்கொள்வதற்குமாக இவ்வாறான தார்மீக சிந்தனைகள் அந்த அலுவலகரிடம் தோற்றம் பெற்றிருக்ககூடும் என்பதை நாம் உணரவேண்டும் எது எவ்வாறாயினும் அங்கே பலவிதமான கேள்விகள் பதிலிருக்கப்படவேண்டி இருக்கின்றது என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பல கேள்விகளுக்கு விடையில்லாத நிலையில் சிவில் பாதுகாப்பு திணைக்களம் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது