புலிப்படை போலே புவியினில் இன்று புதுப்படை உருவாக்கு-செம்
மொழியதை எடுத்தே எதிரியை அழித்து தமிழினை உயர்வாக்கு
வருகின்ற காலம் எமக்கே ஈழம்
என நீ பறை கொட்டு – எம்
செந்தமிழ் மண்ணை சீக்கிரம் மீட்க
படை நிலை நீ கட்டு
சலிப்படையாதே சரித்திரம் படைக்க
சந்ததி உருவாக்கு – போர்
களத்தினில் நின்று இன்னுயிர் நீத்த
வீரரைக் குருவாக்கு
ஆயிரமாயிரம் காலங்கள் நிலைத்திடும்
தமிழினைத் தருவாக்கு – அது
தரணியில் நன்றாய் தழைத்து
வளர்ந்திட உன்னை எருவாக்கு …
*********காரை சசி********************
இதுவரை நாளும் அழுதவர் விழிகள்
இனிமேல் நெருப்பாகும் – பகை
எம்விழி நெருப்பினில் எரிந்திட வேண்டும்
அதுவே சிறப்பாகும்
சுடுகலன் ஏந்திக் களத்திடை நின்றவர்
அடிகளில் மலர் தூவு- தோழா
மை-கலன் ஏந்தி எழுச்சியை எழுது
நிகழும் பகை சாவு
முப்பது வருடம் ஆண்ட எம் இனத்தை
அழித்ததாய் பகை சிரிப்பான் – நீ
மூலைக்குள் பதுங்கி வாழ்ந்தால்
சிங்களன் தினம் எம் தலை நெரிப்பான்
எழுச்சியால் ஆவோம் உரிமைக் குரலை
இன்றே நீ எழுப்பு – எம்
இனத்தின் ஒற்றுமை கண்டால் கரையும்
சிங்களன் இனக் கொழுப்பு
***************அனாதியன்***************
வான் புகழ் தாங்கு வையகம் போற்று சிதையினை நீ மூட்டு -எம்
செந்தமிழ் தூற்றும் சிங்கள நரிகளை
தூக்கி அதில் போட்டு
விடுதலை எண்ணிக் களமுனை
எல்லாம் உன்னை நெருப்பாக்கு -உடன்
பெருந்தலை கொள்ளி எறும்பென திரியும்
பகைவரைக் கறுப்பாக்கு
அந்நியம் வந்தெம் ஆட்சி முறையதை அடியுடன் நீ நீக்கு -அதன்
நுண்ணிய முறையில் ஈழம் அழிவதை
முடிவுடன் நீ போக்கு
சிதைப்படி ஏற்றும் சிங்களம் தன்னை
தூற்றியே பிணமாக்கு -அதன்
விதிப்படி எங்கள் வேகம் கொடுத்து வெற்றியை குணமாக்கு
வலையினை விரிக்கும் பகையினை
உடைக்கப் பலமென உருவாகு -போர்
கலையினைப் பயின்று படையணி
வளர்த்துப் புலியென கருவாகு ..
********தமிழ் சரண்********************