வவுனியாவில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் 80ஆவது நாளாகவும் இன்று தொடர்ந்து வருகிறது.
கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக் கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும் மற்றும் பயங்கரவாதச் சட்டத்தினை நீக்குமாறு கோரியும் அவர்கள் தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை பாராளுமன்ற உறுப்பினர்களான கோடீஸ்வரன், சிவசக்தி ஆனந்தன் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் துளசி ஆகியோர் சந்தித்துள்ளனர்.
இதன்போது தீர்வு கிடைக்கும் வரை இந்த சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.