மன்னார் நீதவான் ரி.ஜே.பிராபாகரன் மேற்பார்வையில் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புகள் அகழ்வு பணிகள் இன்று வெள்ளிகிழமை 19 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்றும் இன்றும் குறித்த வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்ட மனித எச்சங்கள் அனைத்தும் உரிய அனுமதியுடன் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய அப்புறப்படுத்தபட்டு வருகின்றன.
இந்த நிலையில் குறித்த வளாகத்தின் நுழைவுப்பகுதியில் இருந்து ஒரு முழு மனித எழும்பு கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த எழும்பு சிறிய தோற்றம் உடைய மனித எச்சமாக காணப்படுகின்ற போதும் அது தொடர்பான உண்மை தன்மையும் மறைவாகவே உள்ளது.தொடர்சியாக ஆங்காங்கே சிறு சிறு மனித எச்சங்கள் காணப்பட்டாலும் இன்று அகழ்தொடுக்கப்பட்ட முழு அளவிலான எழும்பு கூடு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.