ஐ.நா. மனித உரிமை பேரவையிலிருந்து அமெரிக்கா வெளியேறியமை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்திருக்கும் ஐ.நா.வின் ஆயுதப் பரிகரணத்துக்கான விவகாரங்களுக்கு பொறுப்பாக விளங்கிய முன்னாள் உதவி செயலாளர் நாயகம் ஜயந்த தனபால, இலங்கை அதன் உறுதிமொழிகளை கௌரவப்படுத்த வேண்டுமென அமெரிக்காவும் அதன் நண்பர்களும் இலங்கையை முன்தள்ளுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையானது ஒரு பலதரப்பு அமைப்பாகும். அதன் உறுப்பினராக இருக்கும் நாங்கள் அதற்குரிய கடப்பாட்டைக் கொண்டிருக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார்.
அதேவேளை, இலங்கை மீதான 2015 தீர்மானத்தை அமுல்படுத்துவது தொடர்பாக தொடர்ந்தும் செயற்படுமென அமெரிக்கா கூறியிருக்கின்றது எனவும் மனித உரிமைகள் பேரவைக்குள் இருந்தோ அல்லது வெளியில் இருந்தோ வாஷிங்டன் அதனை செய்யுமென ஜயந்த தனபால தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்காவின் முன்னைய குடியரசுக் கட்சி நிர்வாகங்கள் மனித உரிமைகள் பேரவையுடன் பிரச்சினைகளைக் கொண்டிருந்தமை நன்கு அறியப்பட்ட ஒன்றாகும். வெளியேறுவதும் மீண்டும் மீள் இணைந்து கொண்டமையும் தெரிந்த விடயமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் மீதான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் குறித்து, அவர்கள் இதனை செய்ததற்கான பிரதான காரணம் இஸ்ரேல் மீதான ஐ.நா.வின் தீர்மானங்களுக்கு நாம் ஆதரவளித்திருந்தோம். அமெரிக்கா மனித உரிமைகள் நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிப்பது நீண்டகால அடிப்படையில் இலங்கைக்கு குறுகிய பார்வையைக் கொண்டதாகும். ராஜபக்ஷ நிர்வாகத்தில் அது இடம்பெற்றது. மக்களின் மனித உரிமைகளை ராஜபக்ஷ நிர்வாகம் மீறியிருந்தது. 2015 ஜனவரி 8 இல் சோபித தேரரினால் துரிதமான மாற்றம் ஒன்று ஏற்பட்டது. அதில் பின்னடைவு காணக்கூடாது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
இலங்கை தொடர்பாக அமெரிக்காவும் தீர்மானத்தில் இணை அனுசரணை வழங்கியிருந்தது. மனித உரிமைகள் பேரவையை அமெரிக்கா கைவிட்டிருந்த நிலையில், இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக் குழுவின் அரசியல், வர்த்தக, தொடர்பாடல் பிரிவின் தலைவரான போல் கொட்பிரே கூறுகையில்; 2019 மார்ச்சில் 30/1 தீர்மானம் காலக்கெடுவாக இருக்கின்றது. அதில் உள்ள உறுதிப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு இப்போது, காலம் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கின்றது. அரசாங்கம் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தேசிய நல்லிணக்கத்திற்கான இறுதியான அத்திவாரத்தையிடுவது அவசியமாகும். அமெரிக்காவின் வெளியேற்றத் தீர்மானம் இலங்கை தொடர்பாக விசேடமான தாக்கத்தை ஏற்படுத்தாது என்று போல் கொட்பிரே கூறியுள்ளார்.
“இலங்கைக்கான தேவை குறித்து அமெரிக்கக் கொள்கையில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் நான் ஆச்சரியப்படுவேன். அதாவது, மனித உரிமைகள் பேரவையின் அரசாங்கம் அளித்திருந்த உறுதிப்பாடுகள் தொடர்பாக அமெரிக்காவின் நிலைப்பாடு மாற்றமடைந்தால் அது ஆச்சரியமானதென அவர் கூறியுள்ளார்.
இலங்கை அரசாங்கம் தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியிருந்தது. அந்த உறுதிப்பாடுகள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டவை. 2017 மார்ச்சில் தீர்மானம் தொடர்பாக அவை திரும்ப உறுதியளித்திருந்தன. இந்த உறுதிப்பாடுகள் தொடர்பான முக்கியமான அங்கீகாரமாக இவை அமைந்திருக்கின்றன. இலங்கை எதிர்காலத்திற்கும் சகல இலங்கையர்களுக்கும் இந்த உறுதிப்பாடுகளை நிறைவேற்றுவது அனுகூலமானது.
20172020 வரை இலங்கைக்கு மானியமாக சுமார் 300 மில்லியன் டொலரை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிக்கொண்டிருக்கிறது. விசேட மனிதாபிமான உதவியாக இவை வழங்கப்படுகின்றன. உதாரணமாக வெள்ளம் மற்றும் ஏனைய இயற்கை அனர்த்தங்களுக்கு இவை வழங்கப்படுகின்றன. ஜி.எஸ்.பி.+ போன்ற அனுகூலங்கள் இதில் உள்ளீர்க்கப்படவில்லை என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
அமெரிக்கா வெளியேறுகின்றது தீர்மானம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பேச்சாளர் தெரிவித்திருந்த கருத்தையும் போல் கொட்பிரே மீள அழுத்தி உரைத்திருக்கின்றார். உலகளாவிய ரீதியில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு எப்போதோ அமெரிக்கா முன்னணியிலிருந்து வருகின்றது. மனித உரிமைகள் பேரவையின் வலுவான பங்காளியாக பல வருடங்களாக இருக்கின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.
உலக அரங்கில் ஜனநாயகத்திற்கான வலுவான ஆதரவாளராக அமெரிக்கா கருதப்படும் நிலையில், பேரவையிலிருந்து வெளியேறும் தீர்மானம் அதனை புறம் தள்ளுவதாக அமைந்திருக்கின்றது. ஆயினும் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் மனித உரிமைகளை பாதுகாப்பதுடன், அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்கும் எனவும் கூறியுள்ளார்.