03.07.18 அன்று காலை புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரியில் மாணவர்கள் காலை பிரார்த்தனை நடவடிக்கையின் போது ரெஜினாவின் கொலைக்கு நீதிவேண்டியும் போதைப்பொருள் பாவனையினை கட்டுப்படுத்த கோரியும் கோசங்கள் எழுப்பி தங்கள் கவனயீர்ப்பினை வெளிப்படுத்தியதுடன் உயர்தர மாணவர்களின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் கவனயீர்ப்பு பேராணி ஒன்றினையும் நடத்தியுள்ளார்கள்.
உயர்தர மாணவன் தி.ஜனநான் கருத்து தெரிவிக்கையில்..
ரெஜீனாவை நாங்கள் ஒரு மாணவியாகவோ அல்லது இளம்பராய பெண் ஆகவோ நாங்கள் கருதவில்லை அவள் ஒரு குழந்தையாக காணப்படுகின்றாள் ஒரு குழந்தைக்குக்கூட இந்தகாலத்தில் இவ்வாறான நிலமை காணப்படுகின்றது என்றால் அதனை அரசு கண்டிக்கவேண்டும் உடனடியாக தீர்வு காணவேண்டும் குற்றவாளிகளை பிணையில் விடுவதாகவும்இபக்கபாட்டு பாடிக்கொண்டிருக்கின்றார்கள் மாணவியின் இழப்பிற்கான பதில் சமூகத்திற்கு வழங்கப்படவில்லை எங்கள் அரசியல் வாதிகள் எந்த வியடத்திலும் அக்கறையாக இல்லை தங்களின் பதவிக்காகவும் அரசியல் சுகபோக வாழ்க்கைக்காகவும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.
போதைவஸ்த்து பாவித்த பின்னர்தான் அந்த குழந்தையினை அவர்கள் சிதைத்துள்ளார்கள் போதைவஸ்த்து தான் மூலகாரணமாகஇருக்கின்றது அதனை ஒழிக்கவேண்டும் அதற்கு அரசு நல்ல தீர்;மானம் எடுக்கவேண்டும் இனிவரும் காலங்களில் பாடசாலை மாணவர்கள் எவருக்கும் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாதவண்ணம் அரசு முடிவெடுக்கவேண்டும் போராட்ட காலகட்டத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறவில்லை அரசியல்வாதிகளின் கண்மூடித்தனமாக செயற்பாடுகளால்தான் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அரசியல் வாதிகளிகை தேர்ந்தெடுக்கும் போது எங்களின் சொந்தங்களை பாதுகாக்கும் வகையில் மக்களுக்காக சேவை செய்பவர்களளை வாழ்பவர்களi தேர்தெடுக்கவேண்டும் அப்போதுதான் இவ்வாறான இழிவான செயற்பாடுகள் சமூகத்தில் தவிர்க்கப்படும் நல்ல மாணவர்கள் வளரக்கூடும் இன்றைய குழந்தைகள்தான் நாளைய தலைவர்களாகவும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டிஎழுப்பக்கூடியபவர்களாகும் இருக்கமுடியும் இவ்வாறு இளம் குழந்தைகளை வன்கொடுமை படுத்தினால் அவர்கள் எவ்வாறு வளரமுடியும் மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்றால் அரசியல் வாதிகள் இதில்அக்கறையுடன் செயற்பட்டு மாணவி கொலைக்கு நல்ல தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.