பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஷ்வரன் ஆற்றிய உரையின் ஒலி மற்றும் ஔி வடிவத்தில் உள்ளடங்கிய விடயங்களை எழுத்து மூலம் குறிப்பிட்டு பொலிஸ் திட்டமிட்ட குற்றத் தடுப்பு பிரிவின் பணிப்பாளருக்கு வழங்குமாறு அரச மொழிகள் திணைக்களத்தின் ஆணையாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்தக் குறிப்புகளை தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பெற்றுக் கொடுக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகள் சம்பந்தமாக பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஷ்வரன் ஆற்றிய உரைக்கு எதிராக சிகள ராவய அமைப்பினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பொலிஸ் திட்டமிட்ட குற்றத் தடுப்பு பிரிவினால் தெரிவிக்கப்பட்ட விடயங்களுக்கு அமைவாக நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.