இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை உடனடியாக கண்டு பிடிப்பது கடினமான விடயம். ஆனால் பக்கச் சார்பற்ற விசாரணைகளை நடத்தி இதற்கான நகர்வை ஆரம்பிக்க முடியும் என்று காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்தார்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கும் ,காணாமல் ஆக்கப்பட்ட அலுவலக அதிகாரிகளுக்கும் இடையே கலந்துரையாடல் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் சாலிய பீரிஸ் இவ்வாறு தெரிவித்தார்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டு பிடிப்பதற்கு எமது அலுவலகத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நீங்கள் எமக்கு தரும் தகவல் தான் உறவுகளை கண்டு பிடிக்க வழிவகைகள் செய்யும். எமக்கு ஒரு சந்தர்ப்பத்தை தாருங்கள் என்றார்.