சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா சென்ற 18 இலங்கையர்களை ஆஸ்திரேலியா நாடுகடத்தியுள்ளது. நாடுகடத்தப்பட்ட 18 பேரும் (ஜூலை 17) காலை பண்டாரநாயக்கா சர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்ததாக கூறப்படுகின்றது.
விமான நிலைய அதிகாரிகள் தகவலின் படி, ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரத்திலிருந்து கிளம்பிய சிறப்பு விமானத்தில் 18 இலங்கையர்களுடன் 36 ஆஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகளும் வந்துள்ளனர்.
இந்த 18 பேரும் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா சென்றதற்காக பப்பு நியூ கினிவாவில் உள்ள தடுப்பு முகாமில் சிறை வைக்கப்பட்டிருந்ததாக முதற்கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் கடு
வழியே ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைய முயற்சிப்பவர்களை முழு
கடந்த காலங்களில், போர்ச் சூழல் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக ஈழத்தமிழர்கள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கடல் வழியாக தஞ்சமடைய முயற்சித்துள்ளனர், இப்போதும் சிலர் முயற்சிக்கின்றனர். சமீப ஆண்டுகளாக, விடுதலைப் புலிகளுக்கு உதவியதாகவும் அதன் காரணமாக அச்சுறுத்தலை சந்திப்பதாகவும் கூறி சிங்களவர்களும் வெளிநாடுகளில் தஞ்சமடைவது நடந்து வருகின்றது. இவ்வாறான நிலையில், தற்போது நாடுகடத்தப்பட்ட 18 பேர் தமிழர்களா? அல்லது சிங்களவர்களா? என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.