இலங்கையின் மனித உரிமை ஆணையகத்தின் தலைவர் தீபிக உடகமவிற்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டதை சிவில் சமூக பிரதிநிதிகள் கண்டித்துள்ளனர்.
தீபிக உடகமவிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை 37 சிவில் சமூக அமைப்புகளும் 170 தனிநபர்களும் கடுமையாக கண்டித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
இலங்கை மனித உரிமை ஆணையகத்தின் தலைவர் தீபிக உடகமவிற்கு எதிராக கொலை மிரட்டல்,வன்முறைகள் மற்றும் பகைமையை தூண்டும் கருத்துக்கள் வெளியாகியுள்ளமை குறித்து அதிர்ச்சியடைந்துள்ளோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தீபிக உடகமவிற்கு எதிரான அறிக்கைகள் குறித்து நாங்கள் ஆழ்ந்த கரிசனையையும், அச்சத்தையும் வெளியிடுவதுடன் அவரிற்கான எங்கள் உறுதியான ஆதரவை தெரிவிக்கின்றோம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தீபிகஉடகமவின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு மேற்கொண்டுள்ள வெளிப்படையான,குறிப்பிடத்தக்க, சுயாதீன. கொள்கை தலையீடுகளை நாங்கள் வரவேற்கின்றோம் எனவும் சிவில் சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.