மறு அறிவித்தல் என்னால் வழங்கப்படும்வரை அமைச்சரவை கூட்டத்தினை கூட்டவேண்டாம் என்று கூறியிருந்தேனே தவிர மாகாணசபையை கூட்டவேண்டாம் என்று ஒருபோதும் நான் எங்கும் சொல்லவில்லை என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.
அது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தின் 254நு என்ற பகுதியிலே மாகாணசபை அமைச்சர்கள் நியமனம் தொடர்பில் குறிப்பிடப்பட்டள்ளது. அதில் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. அமைச்சர்களை நியமனம் செய்வது, தீர்மானிப்பது, பெயரிடுவது ஆளுநர் வசம் என்றுள்ளது. ஆயினும் மாகாண முதலமைச்சரின் ஆலோசனையின் பேரிலேயே அவை செய்யப்பட வேண்டும் என்று சொல்லப்படுகின்றது.
முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தனது அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்காக ஒரு குழுவினை அமைத்திருந்தார். அந்த குழுவை அமைத்தவர் அவரே. அவர் பருந்துரைத்த அமைச்சர்கள் மீதே விசாரணை செய்யவே அந்த குழு அமைத்தார்.
அந்தகுழு விசாரணையின் முடிவில் சில அமைச்சர்கள் மீது குற்றங்களை கண்டுபிடித்து நிரூபித்திருந்தது. ஆயினும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள டெனீஸ்வரன் அவர்களை அந்த குழு விசாரணையில் நிரபராதி என விடுதலை செய்திருந்தது.
முதலமைச்சர் எனக்கு பரிந்துஉரைத்தார் இந்த அமைச்சர்களை இல்லாமல் செய்து புதிய அமைச்சர்களை நியமிக்குமாறு பரிந்துரைத்தார். அதற்கு அமைய அவரின் ஆலோசனையை பெற்று சட்டத்திற்கு அமைவாக புதிய அமைச்சர்களை நியமித்தேன்.
இந்த செயற்பாட்டிற்கு எதிராக டெனீஸ்வரன் அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் அவருக்கு இடைக்கால தீர்பு வழங்கியிருக்கின்றது. அதற்கு அமைய அவர் அமைச்சுப் பொறுப்புக்களை தொடர்வதற்கு இடமளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆளுநர் என்ற வகையில் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தேன். எழுத்துமூலமாக நீதிமன்ற உத்தரவிற்கு அமைய செய்ய வேண்டியவை தொடர்பில் பரிந்துரைக்குமாறு இதுவரையில் பதில் வரவில்லை. எனது கடிதங்கள் நேரடியாக தொலைநக ல் மற்றும் அதிவேக தபால் மூலமாக முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
எனவே நீதிமன்ற தீர்பின் காரணமாக பிரதம செயலாளருக்கு ஒரு ஆலோசனை வழங்கியுள்ளேன். மறு அறிவித்தல் என்னால் வழங்கப்படும்வரை அமைச்சரவை கூட்டத்தினை கூட்டவேண்டாம் என்று கூறியிருந்தேனே தவிர மாகாணசபையை கூட்டவேண்டாம் என்று ஒருபோதும் நான் எங்கும் சொல்லவில்லை என தெரிவித்தார்.