யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் கறுப்பு யூலையின் 35 வது ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்றைய தினம் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டிருந்ததோடு, விரிவுரையாளர்களும்.
கலந்து கொண்டிருந்தனர். முதலில் கறுப்பு யூலையில் கொல்லப்பட்ட மக்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலிகள் நடைபெற்றன,
அதனை தொடர்ந்து மலர் வணக்கமும், விரிவுரையாளர்களின் பேச்சுக்களும் இறுதியாக, கறுப்பு யூலையில் தமிழ் மக்கள் எதிர்கொண்ட அழிவுகளை விவபரிக்கும் விபரண காட்சி ஒன்றும் காண்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்வுகள் இன்றைய தினம் அனுஸ்டிக்கப்பட்ட போது மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் கறுப்பு நிற ஆடைகளோடு பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்திருந்தனர். இது தவிர பல்கலைக்கழக வளாகத்தில் கறுப்பு கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தன.