தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் திருப்புமுனையினை ஏற்படுத்திய கட்டுநாயக்கா வான்படைத்தளம் மீது தரைகரும்புலிகள் சென்று தாக்குதல் நடத்தி வீர வரலாறு படைத்து விடுதலை போராட்டத்திற்கு திருப்ப முனையினை ஏற்படுத்திய தாக்குதலின் 17ஆம் ஆண்டு நினைவு நாள்.
தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் தமிழர்களின் வரலாற்றில் ஒவ்வொரு தாக்குதல் சம்பவங்களையும் வெற்றி தாக்குதல்களையும் நினைவிற்கொண்டு விடுதலைப்புலிகளின் வீரத்தினையும் வரலாற்றினையும் எடுத்து செல்ல வேண்டிய தேவை உள்ளது.
கட்டுநாயக்காவில் குண்டுகளை ஏற்றி தமிழர் வாழ் இடங்கள் மீது வீசி தமிழின அழிப்பினை மேற்கொண்ட சிங்களத்தின் வான் கழுகுகளை அவர்கள் வாழ்கின்ற குகைக்கு சென்று அழித்த கரும்புலி மறவர்களின் வீரத்தினை அவர்களின் வரலாற்றினை இன்று நினைவு கொள்ள வேண்டிய தினமாகும்.
தமிழீதேசியத்தலைவர் அவர்களின் மதிநுட்பத்தின் வெளிப்பாடாக இந்த கட்டுநாயக்கா வான் படைத்தளத்தினை தகர்த்து சிறீலங்கா அரசிற்கும் படையினருக்கம் பாரிய இழப்பினை கொடுத்தார்கள்.
கட்டுநாயக்கா தாக்குதலில் சிறீலங்கா அரசின் விமானங்கள் 28 அழிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் பல விமானங்கள் சேதமாக்கப்பட்டுள்ளது. நடத்தப்பட்ட இத்தாக்குதலானது சிறீலங்காவின் பொருளாதாரத்தில் வரலாறு காணாத மாற்றத்தை ஏற்படுத்தியது. இத்தாக்குதலின் மூலம் சுமார் 375 மில்லியன் அமெரிக்க டாலர்களிற்கும் அதிகமான இலங்கை அரசின் சொத்துக்கள் அழிக்கப்பட்டது.
தாக்குதலின் பின்னணி :
இத்தாக்குதலினை வடிவமைத்தவர்கள் விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோர்.
2001 ஜூலை 23 திங்கட்கிழமை மாலை 8.30 14 கரும்புலிகள் உறுப்பினர்கள் ராஜா பெர்னாண்டோ விளையாட்டு மைதானத்தில் கூடினர்.
2001 ஜூலை 23 திங்கட்கிழமை மாலை 9:45 மணியிலிருந்து 11:15 அப்பகுதியில் மின்சார சேவை தடைப்பட்டது.
2001 ஜூலை 24 செவ்வாய்க்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் தாக்குதல் தொடங்கப்பட்டது.
2001 ஜூலை 24 செவ்வாய்க்கிழமை படைத்தளத்தில் இருந்த 21 படை விமானங்கள் மற்றும் பயணிகள் விமானங்கள் அழிக்கப்பட்டன.
2001 ஜூலை 24 செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிவரை தாக்குதல் நீடிக்கப்பட்டது.
தாக்குதலினால் ஏற்படுத்தப்பட்ட இழப்புகள் :
இலங்கை அரசின் கூற்றுப்படி அழிக்கப்பட்ட விமானங்கள் 14 என்று கூறப்பட்டது. விடுதலைப்புலிகளின் அதிகாரப் பூர்வப் பத்திரிக்கையான ஈழநாதத்தின் கூற்றுப்படி அழிக்கப்பட்ட விமானங்கள் எண்ணிக்கை 28 ஆக வெளியிடப்பட்டது. சார்பற்ற அறிக்கை 26 வானூர்திகள் அழிக்கப்பட்டன அல்லது சேதமாக்கப்பட்டன என்று கூறுகின்றது.
முற்றிலுமாக அழிக்கப்பட்டவை :
இரண்டு எ (A) – 340 – 300 பயணிகள் விமானங்கள்
ஒரு எ (A) – 330 -200 பயணிகள் விமானம்
நான்கு கிபிர் போர் விமானங்கள்
மூன்று கெ (K)-8 பயிற்சி விமானங்கள்
இரண்டு எம்.ஐ.ஜி (MIG) – 27 ஜெட் போர் விமானங்கள்
இரண்டு பெல் (bell) 412 உலங்கு வானூர்தி
இரண்டு வி.வி.ஐ.பி (VVIP) 412 உலங்கு வானூர்தி
இரண்டு எம்.ஐ (MI) -17 உலங்கு வானூர்தி
மூன்று K-8
சேதப்படுத்தப்பட்டவை :
இரண்டு – A-320 பயணிகள் விமானங்கள்
ஒரு – A-340 பயணிகள் விமானம்
ஒரு அண்டொனோவ் (Antonov) போக்குவரத்து விமானம்
ஒரு எம்.ஐ (MI) -24 உலங்கு வானூர்தி
ஒரு பெல் (Bell) 412 உலங்கு வானூர்தி
நான்கு கிபிர் போர் விமானங்கள்
விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட இத்தாக்குதலானது இலங்கையின் பொருளாதாரத்தில் வரலாறு காணாத மாற்றத்தை ஏற்படுத்தியது. இத்தாக்குதலின் மூலம் சுமார் 375 மில்லியன் அமெரிக்க டாலர்களிற்கும் அதிகமான சொத்துக்கள் அழிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் மரபுவழிசார் படையணிகள் இருந்த போதும் கடற்படை, தரைப்படை என்ற கட்டமைப்பின்கீழ் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் படைஅணிகள் ஒருநாட்டின் படை அணி கட்டுமானத்திற்கு அமைவாக வான்படையினரை உருவாக்கிய தேசிய தலைவர் அவர்கள், வான்புலிகள் முதல்முதல் சிறீலங்காப் படையினரின் வான்தளம் மீது தாக்குதல் நடத்தி விடுதலைப் புலிகளும் சமபலத்துடனும் சம படைநிலை வலுவுடன் இருக்கின்றார்கள் என்பதனை பன்னாடுகளுக்கு எடுத்துகூறிய தாக்குதல் நாளாக 2007 மூன்றாம் மாதம் 26 ஆம் நாள் கட்டுநாயாக்கா வான்படைதளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அமைகின்றது.
தமிழிழ தேசியத்தலைவர் அவர்களின் தூரநோக்கு சிந்தனைக்கு அமைவாக செயற்பட்ட வான்படைஅணிகள் பின்னாக காலகட்டங்களில் சிறீலங்காப் படையினரின் இலக்குகள் மீது பல தாக்குதல்களை நடத்தி எதிரிக்கு பாரிய இழப்பினை ஏற்படுத்தினார்கள்.
இறுதியில் வான்வழி சென்று சிறீலங்காவின் தலைமையகத்தின் மீது வான் கரும்புலிகள் தாக்குதல் நடத்தியதில் சிறீலங்காப் படையினரிற்கு இழப்பினை ஏற்படுத்தினார்கள்.lll
ஈழநாதம் பத்திரிக்ககையில் அன்று பதிவான அழிக்கப்பட்ட விமானங்கள் எண்ணிக்கை 28 ஆக வெளியிடப்பட்டது.
முற்றிலுமாக அழிக்கப்பட்டவை….
இரண்டு எ (A) – 340 – 300 பயணிகள் விமானங்கள்
ஒரு எ (A) – 330 -200 பயணிகள் விமானம்
நான்கு கிபிர் போர் விமானங்கள்
மூன்று கெ (K)-8 பயிற்சி விமானங்கள்
இரண்டு எம்.ஜ.ஜி (MIG) – 27 ஜெட் போர் விமானங்கள்
இரண்டு பெல் (bell) 412 உலங்கு வானூர்தி
இரண்டு வி.வி.ஜ.பி (VVIP) 412 உலங்கு வானூர்தி
இரண்டு எம்.ஜ (MI) -17 உலங்கு வானூர்தி
மூன்று K-8
சேதப்படுத்தப்பட்டவை…..
இரண்டு – A-320 பயணிகள் விமானங்கள்
ஒரு – A-340 பயணிகள் விமானம்
ஒரு அண்டொனோவ் (Antonov) போக்குவரத்து விமானம்
ஒரு எம்.ஜ (Mi) -24 உலங்கு வானூர்தி
ஒரு பெல் (Bell) 412 உலங்கு வானூர்தி
நான்கு கிபிர் போர் விமானங்கள்
கட்டுநாயக்கா விமானத்தள தகர்ப்பில்…
விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட இத்தாக்குதலானது இலங்கையின் பொருளாதாரத்தில் வரலாறு காணாத மாற்றத்தை ஏற்படுத்தியது.
இத்தாக்குதலின் மூலம் சுமார் 375 மில்லியன் அமெரிக்க டாலர்களிற்கும் அதிகமான சொத்துக்கள் அழிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இத்தாக்குதலில் 14 பெயர் குறிப்பிடமுடியாத மறைமுகக் கரும்புலிகள் வெற்றிக்கு வித்திட்டு காற்றில் கலந்தனர் .தமிழீழ விடுதலை புலிகளின் போராட்ட வாழ்வில் மாபெரும் வெற்றி மகுடம் சூட்டிய நாள். ஆம், கட்டுநாயகா வான்படை தளத்தை தகர்த்த நாள்!
1983 ஆம் ஆண்டு யூலை மாதம், தமிழர்களின் வாழ்வில் மறக்க முடியாத,இன்னல்கள், கொடிய துயரங்கள் நிறைந்த மாதம்.
கொடுங்கோலன் சிங்களவனால்,ஒரு மிகப்பெரிய யுத்தத்தை, தமிழர்களின் வாழ்வில் திணித்த நாள்.
ஆயிரக்கணக்கான தமிழர்களை, சிங்களன் கொன்றொழித்த நாள். லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள்,வீடுகளற்ற அகதிகளாக நடுத்தெருவில் நின்ற நாள். பல்லாயிரகணக்கான தமிழர்களின் வீடுகளையும், ,உடமைகளையும்,அவர்களின் வியாபார ஸ்தலங்களையும் அடித்து நொறுக்கிய நாள்.
தமிழர்களுக்கு பெருமளவில் பொருட்சேதமும், உயிர் சேதமும் நிகழ்ந்த இந்த மாதத்தை தான், கறுப்பு யூலை என்று நினைவு படுத்தி,புலம் பெயர் மக்கள் வாழும்,அனைத்து தேசங்களிலும் ஆண்டு தோறும் அஞ்சலி செலுத்துவது வழக்கம்.
புலம் பெயர் தமிழன் ஒவ்வொருவனும், யூலை மாதத்தின் கடைசி நாட்களை தன் வாழ்நாளில் மறக்க இயலாத அளவுக்கு கொடுமையான சம்பவங்கள் நிகழ்ந்த காலம் இது.
இனி சிங்களனோடு பேசுவதில் எந்த பிரயோஜனமும் கிடையாது. சிங்களனுக்கு புரிந்த மொழி, திருப்பி அடிப்பது தான். பொருளாதாரத்தில் அவனை சிதைப்பது தான் என்று முடிவு கட்டிய,தமிழீழ விடுதலைப் புலிகள், கறுப்பு யூலைக்கு பதிலடியாக, ஒரு மாபெரும் யுத்தத்தை, இழப்பை சிங்களனுக்கு தரவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருந்தார்கள்.
ஆம் அந்த தாக்குதலுக்காக 2001 ஆண்டு யூலை 24 ஆம் நாள் என்று,தேதி குறிக்கப்பட்டது. கட்டுநாயகா வான்படை தளத்தை தகர்ப்பது என்று முடிவெடுத்தார்கள் விடுதலைப்புலிகள்.
வடக்கிலும் கிழக்கிலும் வாழ்ந்த விடுதலைப்புலிகள், எதிரியை அவன் கோட்டைக்குள்ளேயே புகுந்து தாக்கி, தங்கள் வீரத்தை நிலைநாட்ட வேண்டும் என்று முடிவெடுத்து, இலங்கையின் இதயமான கொழும்புக்கு உள்ளேயே ஊடுருவினார்கள்.
பதினான்கு கரும்புலிகள் யூலை மாதம் 24 ஆம் தேதி அதிகாலை மூன்றரை மணிக்கு, கட்டுநாயகா வான்படை தளத்துக்குள் நுழைந்தார்கள்.
இருபத்தாறு விமானங்களை தகர்த்தார்கள். அதில் பண்டார நாயகா விமான நிலையத்தில் நின்ற, நான்கு பயணிகள் இல்லாத விமானம் உட்பட. அதிகாலை மூன்றரை மணிக்கு ஆரம்பித்த யுத்தம்,காலை எட்டரை மணிக்கு முடிவுக்கு வந்தது.
வெறும் ஐந்து மணி நேரத்தில்,எதிரியின் இருபத்தாறு போர் விமானங்களை தகர்த்த எம் கரும்புலிகள், வீரச்சாவை தழுவினார்கள். இந்த யுத்தத்தை திட்டமிட்டு, முன்னின்று நடத்தியவன் மாவீரன் தளபதி சார்லஸ்.
இந்த தாக்குதலால் சிங்களனுக்கு ஏற்பட்ட இழப்போ முன்னூற்று ஐம்பது மில்லியன் அமெரிக்க டாலர்கள்.அது மட்டுமா, பாதுகாப்பில்லை என்று கருதி,சிங்களனின் சுற்றுலா வணிகம் அடியோடு சிதைந்து போனது. விமான நிலையம் மூடப்பட்டது. கடும் பொருளாதார வீழ்ச்சியை சிங்களவன் சந்தித்தான்.
துன்பத்தை தந்தவனுக்கே,அந்த துன்பத்தை திருப்பி கொடுத்தார்கள் எம் மாவீர கண்மணிகள்.
கொழும்பு விமான படை தளத்தில் புகுந்து இருபத்தாறு விமானங்களை தாக்க தெரிந்த விடுதலை புலிகளுக்கு, சிங்களனில் ஒரு ஆயிரம் பேரை கொல்வது என்பது கடினமான விடயமா?
சாவை துச்சமென மதித்து தான், கரும் புலிகளாக களத்தில் நிற்கிறார்கள். அப்படி துணிந்த பிறகு சிங்களனில் ஒரு ஆயிரம் பேரை கொன்றிருக்க முடியாதா?
ஏன் செய்யவில்லை? காரணம் தலைமை அப்படி. நம் எதிரி சிங்கள அரசும், ராணுவமும் தானே ஒழிய,சாதாரண சிங்கள மக்கள் அல்ல.அவர்கள் நம் இலக்கு அல்ல என்று பல முறை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்தவன் எங்கள் தலைவன் பிரபகாரன்.
அந்த அளவுக்கு கட்டுப்பாடுகளோடு, படை நடத்தியன் எங்கள் தலைவன் பிரபாகரன். முப்பதாண்டு கால ஆயுத போரில், விடுதலைப்புலிகள் ஒரு சிங்களத்தியை, கையைப் பிடித்து இழுத்தார்கள், பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்கள் என்று எவனாவது குற்றம் சொல்ல முடியுமா?
ஏன் என் எதிரி சிங்களன் அப்படி ஒரு குற்றசாட்டை சொல்ல முடியுமா? முடியாது.காரணம் அந்த அளவுக்கு ஒழுக்கமான தலைமை, தலைவனின் வழியில் கட்டுகோப்பான போராளிகள்.
கட்டுநாயக்கா விமானத்தள தகர்ப்பில்…
எங்கள் போராட்டங்களில் வேண்டுமானால், பின்னடைவு ஏற்பட்டு இருக்கலாம். ஆனால் எங்கள் போராட்ட வழியில் நேர்மையும், நியாயமும் இருந்தது. எதிரியை தாக்குவதில் கூட ஒரு கட்டுப்பாடு இருந்தது.
உலக விடுதலை போராட்ட வீரர்களில், விடுதலைப் புலிகளை போல வீரம் செறிந்த போராளிகளும் இல்லை. பிரபாகரனை போன்ற மாவீரன் எவனும் இல்லை என்று மார் தட்டி சொல்வோம்.
கட்டுநாயக்கா வான்படை தாக்குதலில், வீரச்சாவை தழுவிய எம் கரும்புலி வீர மறவர்களுக்கும்,கறுப்பு யூலையில், சிங்களவனால் கொடூரமாக கொன்றொழிக்கப்பட்ட,எம் உடன்பிறப்புகள் அனைவரையும் நெஞ்சிருத்தி வணங்குகின்றோம்.
பல கரும்புலி வீரர்கள் இன்று பெயர் குறிப்பிடப்படாத கல்லறைகளில் அநாமதேயமாக உறங்கியபோதும் அவர்களது அற்புதமான சாதனைகள் வரலாற்றுக் காவியங்ககளாக என்றும் அழியாப் புகழ்பெற்று வாழும். – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.