தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்களிடம் விசாரணை,
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக பினாங்கு மாநில துணை முதல்வர் டாக்டர் பி.இராமசாமி மற்றும் சதீசு முனியாண்டி அவர்கள் மீது பழி சுமத்தி விசாரிக்கவே திட்டமிட்டு 50-கும் மேற்பட்ட காவல் துறை புகார்கள் செய்துள்ளனர்.
இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளியும் மாற்று இனத்தின் நம்பிக்கையை இழிவுபடுத்தி வரும் சர்ச்சைக்குரிய மதப்போதகர் ‘சாக்கிர் நாயக்கை’ தமது பல்லினம் ஒற்றுமையாக வாழும் மலேசிய திருநாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என எதிர்கட்சியாக இருந்த போதிலிருந்து தற்போது ஆளுங்கட்சியாக ஆனமுதல் தொடர்ந்து வலியுறுத்தி வருவதால் சாக்கிர் நாயக்கின் ஆதரவாளர்கள் பினாங்கு மாநில துணை முதல்வர் டாக்டர் பி.இராமசாமி மீது பழி சுமத்தி உள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றி இராமசாமியிடம் டிஎபி (Democratic Action Party ) விளக்கம் கோறியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பினாங்கு துணை முதலமைச்சர் ஆதரவு அளிக்கிறார் என்று அவர் மீது சாட்டப்படும் குற்றச்சாட்டுக்கு டிஎபி (Democratic Action Party )அவரிடமிருந்து விளக்கம் கேட்டுள்ளது.
இராமசாமியால் சரியான விளக்கம் அளிக்க முடியும் என்று பினாங்கு முதலமைச்சர் சௌ கோன் யியோவ் நம்பிக்கை கொண்டுள்ளார்.
“அவரிடமிருந்து விளக்கம் பெற விரும்புகிறவர்களுக்கு அவர் விளக்கம் அளிப்பது நல்லது, ஏனென்றால் அரசியலில் இறங்குவதற்கு முன்பு அவர் அமைதிப் பேச்சுகளில் பங்கேற்றுள்ளார், அதுவும் சிறீ லங்காவில் மட்டுமல்ல, ஆச்சேயிலும் பங்கேற்றுள்ளார், ஆகவே அவரிடம் சரியான பதில் இருக்கும் என்று நான் நம்புகிறேன்”, என்று மாநில டிஎபி தலைவர் தெரிவித்ததாக இன்று சினார் ஹரியான் செய்தி கூறுகிறது.
இராமசாமி குறித்த டிஎபியின் நிலைப்பாடு என்ன என்று பெர்லிஸ் முப்தி முகமட் அஸ்ரி ஸைனால் அபிடின் எழுப்பியிருந்த கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் இவ்வாறு கூறினார்.
புத்ரா ஜெயா இஸ்லாமிய சமய போதகர் ஸக்கீர் நாய்க்கை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப மறுத்ததை இராமசாமி குறைகூறியதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக இக்குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டுள்ளன.
விடுதலைப் புலிகள் சம்பந்தப்பட்ட விசாரணையில் ஒத்துழைக்க இராமசாமி தயார்.
பினாங்கு மாநில 2-வது துணை முதல் அமைச்சர் பி.இராமசாமி, தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் மீதில் விசாரணை மேற்கொள்ளும் மலேசிய காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவுள்ளதாக இன்று உறுதியளித்தார்.
இராமசாமி மீதான விசாரணை அறிக்கையைத் திறந்து விட்டதாக போலிஸ் தலைவர் மொஹமட் ஃபுஸி ஹருன் கூறியதைத் தொடர்ந்து, அவர் இந்த வாக்குறுதியைக் கொடுத்தார்.
இருப்பினும், தன் மீது குற்றஞ்சாட்டி, அவதூறு பரப்பும் தரப்பினரையும் விசாரிக்க வேண்டுமென அவர் காவல்துறையினரை வலியுறுத்தினார்.
“நான் போலிசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன்,” என அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார். ஒரு வாரத்திற்கு முன்னர், போலிஸ் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து விசாரணை!
மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் பி. ராமசாமிக்கு எதிராகவே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவருக்கு எதிராக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதை அடுத்தே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள பேராசிரியர் ராமசாமி, தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் அல்ல எனவும் மலேசிய பிரஜை எனவும் ஊடகங்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
பேராசிரியர் ராமசாமி, இந்தோனேசியா – ஆச்சே மாநில இனப்பிரச்சினையில் தலையீடுகளை மேற்கொண்டிருந்ததுடன் 2006 ஆம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புகளை பேணி வந்துள்ளார்.
நோர்வே அரசாங்கம், இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண தலையீடுகளை மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் தாம், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டதாக பேராசிரியர் ராமசாமி ஏற்றுக்கொண்டுள்ளார்.
கலஸ்னிபோஃப் துப்பாக்கிக்கு போராசிரியர் ராமசாமி மரியாதை செலுத்தும் புகைப்படம் ஒன்று வெளியானத்தை அடுத்தே அவர் குறித்து கவனம் செலுத்தப்படுவது அதிகரித்தது.
அதேவேளை தமிழகத்தில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அரசியல் தலைவரான வைகோ, மலேசியாவுக்கு விஜயம் செய்ய, பேராசிரியர் ராமசாமியே அனுசரணை வழங்கியிருந்தார்.
வேறுபாடுகளைக் கடந்து பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் பி. ராமசாமிக்கு தமிழர்கள் ஆதரவு
பினாங்கு மாநிலத் துணை முதல்வர், முனைவர் ப.இராமசாமிக்கு, மலேசியத் தமிழர்கள் அனைவரும் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து துணை நிற்க வேண்டும் என தமிழ் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இராமசாமிக்குத் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்பு இருப்பதாக, பல்வேறு தரப்பினர் அவருக்கு எதிராக காவல்துறையில் புகார் செய்திருப்பதுடன்; அமைதி மறியலிலும் ஈடுபடப் போவதாக மிரட்டி வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் மலேசியத் தமிழர்கள் அனைவரும் ஒன்றுப்பட்டு அவருக்கு ஆதரவாக நிற்பது அவசியமாகும் என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன் தெரிவித்தார்.
இராமசாமியைப் பொறுத்தமட்டில் எல்லா காலகட்டங்களிலும் மொழி – இன உணர்வுகளை வெளிப்படுத்துவதில் தயங்காதவர். அவ்வகையில் உலகத் தமிழர்களின் தொப்புள்கொடி உறவுகளான தமிழீழ மக்களுக்காகவும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார் என்பதை மறுப்பதற்கில்லை என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் சரவணன் கூறியுள்ளார்.
இத்தகைய தருணங்களில் தமிழர்கள் தங்களுக்கிடையே உள்ள அரசியல் கொள்கை வேறுபாடுகளை மறந்து, ஒன்றுபட வேண்டும் என சரவணன் மலேசியத் தமிழர்களை வலியுறுத்தியுள்ளார்.