மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்பு அகழ்வு பணிகள் 42ஆவது நாளாகவும் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.குறித்த அகழ்வு பணியில் ஹோமாகம பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பௌத்த பிக்குகளும் இணைந்து கொண்டுள்ளனர்.மன்னார் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரனின் மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி டபிள்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ச தலைமையில் அகழ்வுப் பணிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதேவேளை, இன்றைய தினம் வைத்திய அதிகாரி ராஜபக்ச விடுமுறையில் சென்றுள்ளமையால் இவருக்கு பதிலாக குருநாகல் சட்ட வைத்திய அதிகாரி அஜித் திஸநாயக்க தலைமையில் அகழ்வு பணி இடம்பெற்று வருகின்றது.அத்துடன், இதில் களனி பல்கலைக்கழக பேராசிரியர் ராஜசோம தேவாவின் குழுவினரும் இணைந்து கொண்டுள்ளனர்.
மேலும், இது வரைக்கும் 32 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதுடன், குழிக்குள் அடையாளமிடப்பட்டிருக்கும் 52 எலும்புக்கூடுகள் மீட்டெடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.