கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது என பொது மக்களும் பொது அமைப்புக்களும், பொது மக்களும் கவலை தெரிவித்துள்ளனர்.
நாளுக்கு நாள் சட்டவிரோத மணல் அகழ்வு பாரியளவில் இடம்பெற்று வருகிறது என்றும், உள்ளூர் நபர்களும், வெளியிடத்தவர்களும் இணைந்தே சட்டவிரோதமாக மணல் அகழ்வுக்கு அனுமதிக்கப்படாத இடங்களில் மணல் கொள்ளையில் ஈடுப்பட்டு வருகின்றனர் எனவும் பொது மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக பளை பிரதேசத்தின் கிளாலி, அல்லிப்பளை, தர்மக்கேணி, மாசார், சோரன்பற்று, புலோப்பளை, இயக்ககச்சி, போன்ற பிரதேசங்களில் இவ்வாறு சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது.