வியட்நாமில் பா நா என்ற மலைப்பகுதிக்கு இடையே கோல்டன் ப்ரிட்ஜ் என அழைக்கப்படும் தங்க மேம்பாலம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்.
வியட்நாமின் தானாங் என்ற இடத்தில் பா நா மலைப்பகுதி உள்ளது. இங்கு 150 மீ நீளம் கொண்ட மேம்பாலம் மலைகளுக்கு இடையே மிக பிரம்மாண்டமாகவும் கலை உணர்வுடனும் புதுப்பிக்கப்பட்டு ஜூன் மாதம் மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. கடந்த 1919 ஆம் ஆண்டு, பிரெஞ்சு காலனியர்கள் உருவாக்கிய இந்த மலைப்பாதையை வியட்நாம் சுற்றுலா துறையினர் புதுப்பித்துள்ளனர். 2 பிரம்மாண்ட கைகள் மரங்களிலிருந்து வந்து பெரும் தங்க மேம்பாலத்தை தாங்கி நிற்பதாக அதன் வடிவமைப்பு உள்ளது.