பாகிஸ்தானின் சிலாஸ் டவுனில் பனிரெண்டு மகளிர் பள்ளிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். பள்ளிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் தீவிரவாதிகளை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
கில்கிட்-பல்திஸ்தான் நகரத்தில் இருந்து 130 கிமீ தூரத்தில் சிலாஸ் என்னும் டவுன் உள்ளது. இங்கு அமைந்திருக்கும் பனிரெண்டு மகளிர் பள்ளிகளுக்கு, நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்துள்ளனர். டைமர் மாவட்டத்தை சுற்றி இருக்கும் பள்ளிகளின் ப்ராப்பர்டிகளையும் அவர்கள் சேதப்படுத்தினர்.
இந்த தாக்குதலை தொடர்ந்து பொது மக்களும், குற்றவாளிகளை கைது செய்யுமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பள்ளிகளை குறிவைத்து அவ்வப்போது தீவிரவாதிகள் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக பள்ளிகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மாவட்ட நிர்வாகத்தின் தரப்பில், தற்போது பள்ளியில் கட்டுமான பணி நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. தவிர, தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தை சுற்றி போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 10 வருடங்களில் சுமார் 1500 பள்ளிகள், தீவிரவாதிகளால் அழிக்கப்பட்டிருக்கின்றன.
2012ல் கல்வி ஆர்வலரும், நோபல் பரிசு பெற்றவருமான மலாலா யூசப்சாய், ஸ்வாட்டில் பெண்களுக்கான கல்வி குறித்து வாதாடும் போது, தலிபான்களால் தாக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.