ஒரு நாட்டிலே மதமொன்று அழிக்கப்படுகின்ற போது அதற்கு முகங்கொடுக்க வேண்டிய பொறுப்பு அந்தந்த மத தலைவர்களிடத்தே இருக்கின்றது என்பதனை யாரும் மறந்துவிடக்கூடாது என கல்முனை விகாராதிபதி ரண்முத்துக்கல சங்க ரத்தின தேரர் குறிப்பிட்டிருந்தார்.
தேசிய ஒருமைப்பாட்டிற்கும், நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் அனுசரணையுடன் கல்முனை கல்வி வலய அலுவலகத்தினால் தமிழ், சித்திரை புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வானது கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் கல்முனை வலயத்தின் வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அங்கு உரையாற்றினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இந்த நல்லாட்சி அரசாங்கமானது இந்த நாட்டு மக்கள் அனைவரும் சகோதரத்துவத்துடனும், ஒற்றுமையுடனும் வாழ வேண்டும் என்பதற்காக பல நல்ல செயற்பாடுகளை செய்து வருகின்றது.
அதில் ஒரு கட்டமாகவே இன்று இந்த இடத்திலே தமிழ், சிங்கள, முஸ்லிம் மதங்களை சார்ந்த அனைத்து பாடசாலைகளிலும் உள்ள மாணவர்கள் வருகைதந்திருக்கின்றார்கள் இதனை கல்முனை கல்வி வலயம் ஒழுங்குபடுத்தி செய்து கொண்டிருப்பது சிறந்ததொரு விடயமாகும்.
இந்த நாட்டிலே உள்ள தமிழ், சிங்கள, முஸ்லிம் சமூகமானது சந்தோசமாக வாழ வேண்டும் அவர்களிடத்தே ஒற்றுமை வெளிக்காட்டப்பட வேண்டும் இப்போது இந்த நாட்டிலே நான் ஒரு பௌத்த மத தலைவர் என்ற வகையில் எனக்கு அடிக்கடி சேறு பூசும் செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டுதான் வருகின்றது அவ்வாறு செய்பவர்களுக்கு நான் கூற விளைவது என்னவென்றால் நான் ஒரு இனவாதி இல்லை என்பதனை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
நானும் ஒரு பௌத்த மதத்தின் தலைவர் என்ற ரீதியில் எனது மதத்தினை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு என்னிடம் இருக்கின்றது அதனையே நான் செய்கின்றேன் என்பதனை ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
பல்லின சமூகம் வாழும் இந்த நாட்டிலே ஒவ்வொரு இனங்களும், மதங்களும் வேறுபாடுளை களைந்து அனைவரும் சகோதரர்கள் என்ற முறையில் உற்றுமையுடன் வாழவேண்டும் எதிர்கால சந்ததியினருக்கு நாங்கள் நல்ல சிந்தனைகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.
இந்த இடத்திலே பல்வேறுபட்ட இனத்தை சேர்ந்த மாணவர்கள் ஒன்று கூடியிருக்கின்றார்கள் அவர்கள் தங்களுக்குள்ளே உள்ள திறமைகளை வெளிக்காட்டுவதற்கு தயாராக இருக்கின்றார்கள் அவர்களே நாளைய தலைவர்கள் அவர்களை நல்ல வழியில் வழிப்படுத்த வேண்டியது எமது கடமையும் பொறுப்புமாகும் எனவும் கூறினார்.
இந்நிகழ்விற்கு மதப்பெரியார்களாக கல்முனை விகாராதிபதி ரண்முத்துகல சங்கரெத்தின தேரர், இந்து மதப்பெரியார் கே.யோகராசா குருக்கள் மற்றும் பிரதம அதிதியாக கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல் பிரதிக்கல்வி பணிப்பாளர்கள், வலயத்தின் ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கல்முனை வலயத்தில் உள்ள தமிழ், சிங்கள, முஸ்லிம் மாணவர்களை உள்ளடக்கிய இந்த நிகழ்வில் நான்கு மதங்களையும் உடைய மதப்பெரியார்களும் ஆசியுரை வழங்கினார்கள்.