வணக்கம் கவிப்பிரியை சுஜனி நீங்ஙள் முகநூலில் கவிதைகள் சில கட்டுரைகள் என எழுதி வருகின்றீர்கள், அத்தோடு பாடல்களும் எழுதி வருகின்றீர்கள், உங்களிடம் சில கேள்விகள்.
வணக்கம் சுமன் சகோ அவர்களே உங்களது புதியதோர் முயற்ச்சியான கேள்விக்கு என்ன பதில் பதிவில் என்னையும் ஒரு படைப்பாளியாக மதிப்பளித்து வெளியுலகத்திற்கு அறிமுகம் செய்தமைக்கு முதற்கண் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.
கடலூரான் சுமன்- நீங்கள் இதுவரை வெளிக்கொண்டுவந்த படைப்புக்கள் பற்றிக் கூறுங்கள்?
கவிப்பிரியை சுஜனி- எனது படைப்புகள் சமூகம், காதல்,வீரம்,பெண்ணியல், சம்மந்தமாகவே என் படைப்புகள் பெரும்பாலும் அமைந்திருக்கும். அதாவது இன்றைய காலக்கட்டத்தில் ஆணாதிக்கம் முந்திய காலங்களை விட குறைவாக காணப்பட்டாலும் பெண்கள் ஏதோ ஒரு வழியில் ஆணாதிக்கத்திற்குள் அடிமைப்பட்டர்களாகவே வாழ்கின்றனர்.
இன்றைய காலக்கட்டத்தில் காற்றின் வேகத்தை விட அவர்களின் செயல்கள் பல துறைகளில் அதிவேகத்தை கண்டாலும் . சமூகத்தில் பெண் என்பவளை ஒரு போதைப் பொருளாகவும் ,ஒரு கவர்ச்சிபொருளாகவுமே கையாளப்பட்டுதான் வருகின்றாள். இதையே என் சிந்தையில் நிறுத்தி என் படைப்புகளை நகர்த்துகின்றேன்
என் படைப்பானது சமூகத்திற்கு சென்றடைய வேண்டும் சமூகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வரவேண்டும் , என் எழுத்துக்களை நூறு பேரிடம் சென்றடைந்தாலும் அதில் ஒருவரேனும் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில்தான் என் படைப்புகளை படைத்து வருகின்றேன்.
அப்படி ஒரு மாற்றத்தை சமூகத்தில் ஏற்படுத்தினால் அதுவே என் வெற்றியாக கருதுகின்றேன்,
கடலூரான் சுமன்- இது மூங்கில்க் காட்டின் இசை,இது இருளின் இசை இறுவெட்டுக்களில் பாடல் எழுதும் சந்தர்பம் எவ்வாறு உங்களுக்கு கிடைத்தது?
கவிப்பிரியை சுஜனி- எனது முதல் பாடல் இது மூங்காட்டின் இசை என்ற இறுவெட்டில்தான் வெளியானது இப்பாடலை எழுதுவதற்கு சந்தர்ப்பத்தை வழங்கியது முகநூல் வாயிலாகத்ததான் தமிழன் யாதவன் றகு என்ற சகோதரர் என் முகநூல் படைப்புகளை பார்வையிட்டு உங்கள் வரிகள் சிறப்பாக அமைந்துள்ளது என்று கூறினார் அதனால் முள்ளிவாய்க்கால் நினைவாக இறுவெட்டு வெளியிட உள்ளதாக இருக்கின்றோம் அதில் எனது பங்களிப்பையும் வழங்கும்மாறும் கேட்டிருந்தார்.அச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி என்னால் முடிந்தளவு பங்களிப்பை வழங்கி இருந்தேன், பாடலும் வெளியானது பாடல் முகநூல் வாயிலாகவும் பல பேரின் வரவேற்பை பெற்றிருக்கின்றது எனது வரிகளுக்கு ஆதரவு வழங்கியவர்களுக்கும் ,வழங்கிக்கொண்டு இருப்பவர்களுக்கும்,இப்பாடலை எழுதுவதற்கு சந்தர்ப்பம் அமைத்து தந்த சகோ அவர்களுக்கும்.இவ் இறுவெட்டு வெளியாகுவதற்கு பாடுபட்ட அனைவருக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியை தெரிவித்துகொள்கின்றேன்,
கடலூரான் சுமன்- உங்கள் பெயருக்கு முன் கவிப்பிரியை என்னும் பெயர் வரக்காரணம் என்ன?
கவிப்பிரியை சுஜனி- கவிப்பிரியை என பெயர் இட்டதன் காரணம் நான் சிறு வயதில் இருந்து எழுத்தை நேசித்து வந்தவள் அதாவது எனது தாயின் தந்தை ஒரு நாடகத்துறைகளிலும் இசைத்துறைகளிலும் எழுத்துறையிலும் அதிக ஈடுபாடு கொண்டவர் . சிறுவயதில் தாய் தந்தையை இழந்த நான் அவரின் வழிகாட்டளில் வளர்ந்தேன் இவரின் எழுத்தார்வம் என்னை கட்டி இழுத்தது இவருடன் இணைந்து சிறு வயதிலே கதைப்புத்தகங்கள் ,செய்தித்தாள்கள் வாசிக்க தொடங்கினேன்.
வாசித்தளினால் ஏற்பட்ட ஆர்வமே காலப்போக்கில் தமிழை தீவிரமாக நேசிக்க ஆரம்பித்தேன் இந்த காதல் படிப்படியாக கவிதை எழுத வைத்தது பதின் மூன்று வயதில் என் முதல் கவிதையை படைத்தேன் கவிதையில் மிகுந்த ஆசைகொண்டதால் கவிப்பிரியை என பெயரிட்டுக்கொண்டேன்.
கடலூரான் சுமன்- ஒரு பெண்ணாக நீங்கள் முகநூலில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்ன?
கவிப்பிரியை சுஜனி- முகநூலில் பல கோணங்களில் படைப்புகளை அலசி ஆராய்ந்து படைக்கும் பொழுது பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கவேண்டிய சந்தர்ப்பத்திற்கு உள்ளாகின்றேன் ஒரு வாழ்வியல் கஷ்டங்களையோ,அல்லது காதல் வலிகளையோ, பெண்களுக்கெதிரான வன்முறைகளைப் பற்றி எழுதும் பொழுது உள்பெட்டிக்குள் வந்த சிலர் அனுதாபம் காட்டுவதாகவும்,காதலில் தோல்வி அடைந்து விட்டீர்களா எனவும்,ஏன் ஆண்களையே குறைகூறுகின்றீர்கள் என்ற முரண்பாடுகளும்,நாட்டில் நம் மக்கள் பட்ட துயரத்தை எழுதினால் முடிந்த பிரச்சினைகளை ஏன் மக்களிடம் மீண்டும் புகுத்தி வலிகளை உருவாக்குகின்றீர்கள் என பலதரப்பட்ட முரண்பாடுகளுக்கு முகம் கொடுக்க வேண்டி உள்ளது,
பெண்ணியம் பேசி என்ன செய்ய போறியல் வீட்டு வேலையை கவனியுங்கள் என்ற கருத்தும் பெண் பெண்ணாக வாழ்ந்தாளே சிறப்பு என சம்மந்தம்மில்லா கேள்விகள் ,வாக்குவாதங்களை, செவியில் புகுத்தாமல் தடைகள் அனைத்தையும் தகர்தெறிந்து அவற்றை ஒரு படிக்கற்களாய் மாற்றி என் பயணத்தை பயணிக்கின்றேன் நான் மட்டும்மல்ல என் போன்ற சகோதரிகளும் இப்பிரச்சினைக்கு முகம் கொடுக்கின்றார்கள் என்பதில் ஐயம் இல்லை.
கடலூரான் சுமன்- இன்று முகநூலில் பலரும் அரசியல்பற்றி பேசத்தொடங்கிவிட்டார்கள், நீங்கள் இன்றைய அரசியலை எவ்வாறு பாக்கின்றீர்கள்?
கவிப்பிரியை சுஜனி- அரசியல் என்பது முக்கியமானதொன்று ஆட்சி என்பது ஒரு தனித்துவமான சீரான முறையில் மேற்க்கொண்டால் நன்மையென கருதுகின்றேன், இன்றைய அரசியலை நோக்கும்மிடத்து பதவிக்கும் பணத்திற்கும் ஆசைப்பட்டு ஆட்சியில் அமர்கின்றார்கள் ஆனால் மக்களுக்கு வாக்களிக்கும் முன் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை செயல்முறை திட்டங்களை மக்களுக்கு செய்து கொடுக்க தவறுகின்றனர். ஒருவருக்கொருவர் பதவி போட்டிகளில் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டு துரோகச்செயல்களை புரிந்து கொண்டு சுயநலவாதிகளாகவே வாழ்கின்றனர்.
மக்களின் உரிமைகளையும் உணர்வுகளை துளியளவும் கணக்கெடுக்காமல் தங்கள் பதவி ஆசைகளிலும் ஆடம்பர வாழ்க்கையிலும் தங்களது வாழ்க்கையை நகர்த்தி செல்கின்றனர்.
என்று இனம் ,மதம்,பேதம் இன்றி சமத்துவம் பேணப்படுகின்றதோ அன்று மலரும் நல்லாட்சி,
நல்லாட்சி என்ற பெயரில் கொடுங்கோல் ஆட்சியே மேற்க்கொண்டு வருகின்றது இன்றைய அரசாங்கம்.
கடலூரான் சுமன்