ஊழல்களை அம்பலப்படுத்தும் விதமாக மோடி அரசுக்கு எதிராக நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் பிரசார இயக்கம் நடத்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்கிறது.
வங்கி முறைகேடு, நாட்டின் பொருளாதார வீழ்ச்சி, விவசாயிகளின் பிரச்சனைகள், வேலையில்லா திண்டாட்டம், ரபேல் போர் விமான ஊழல், அசாம் குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில் தவறான அணுகுமுறை ஆகியவை குறித்து நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் பிரசார இயக்கம் நடத்துவது என கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்த காரிய கமிட்டியின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.