முன்னதாக காங்கோவின் வடக்கு பகுதிகளில் 22 பேருக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் எபோலா வைரஸ் தாக்கி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கிழக்கு காங்கோவில் எபோலா நோய் பாதிப்பு காரணமாக 33 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறையின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 879 பேருக்கு எபோலா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனம் அனுப்பிய எபோலா வைரஸ் தடுப்பு மருந்துகள் மூலம் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. காங்கோவில் பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் மற்றும் அவர்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு தேவையான மருந்து கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு உயிர் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.