தமிழினப் படுகொலை நினைவு நாள் நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளதாக மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.
மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட உறவினர்களின் பங்கேற்புடன் நிகழ்வு இடம்பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழின படுகொலை நினைவு நாள் நிகழ்வானது மன்னார் அடம்பனில் எதிர்வரும் 18 ஆம் திகதி காலை 9.15 மணியளவில் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.
எனவே அனைவரையும் கலந்து கொண்டு அவர்களது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் எனவும், குறித்த நினைவேந்தல் நிகழ்வில் அனைவரையும் பங்கு கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.