மயிலிட்டி மீன்பிடித் துறைமுக மீள்கட்டுமானத் திட்டத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்தவாரம் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
சிறிலங்கா படையினரின் ஆக்கிரமிப்பில் நீண்டகாலமாக இருந்து வந்த யாழ். குடாநாட்டின் மிக முக்கியமான- பழைமைவாய்ந்த மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம், அண்மையில் விடுவிக்கப்பட்டது.
வடக்கின் மீன் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கிலும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கிலும், மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை நவீன வசதிகளுடன் அபிவிருத்தி செய்து மீண்டும் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு கட்டமாக மயிலிட்டி துறைமுக மீள்கட்டுமான திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது,. யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த கூட்டத்தில், இது தொடர்பாக சிறிலங்காவின் கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைக்கர் விஜித் விஜிதமுனி சொய்சா சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.